பக்கம்:பிராயச்சித்தம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 லா. ச. ராமாமிருதம் "நீ சொன்னாய் என்று சொல்லவில்லை, குழந்தாய். ஆனால் சின்னச் சின்ன உதவிகளில்தான் பெரிய பெரிய சந்தோஷங்கள்-ஆதரவுக்கு ஏங்கிக் கிடக்கும் வறட்சி நிலையில் அதெல்லாம் பாலைவனச் சோலைகள்.” அவள் விக்கி விக்கி அழுதாள் அவர் தேற்ற முன் வர வில்லை. மணலில் விழுந்தது கண்ணிர் ஆனாலும் விழுந்த இடம் அந்தச் சமயத்துக்கு ஈரம்தான். கண்ணிரின் ஈரம் ஆசியில் தெளிக்கும் கமண்டல தீர்த்தம். அழுதவளும் யாருக்காக அழுதாளோ.. இருவருமே கண்ணிரால் ஆசிர் வதிக்கப் பட்டவர்கள். அவருக்குத் தோன்றிற்று. ஆனால் சொல்லவில்லை. சங்கீதத்தில் எனக்கிருக்கும் ஈடுபாடு கண்டு அவர் வாங்கிக் கொடுத்த புல்லாங்குழல்தான் இது... குழலை யோசனையில் நெருடினார். அவர் விடுதியில் எங்கள் விளையாட்டு நேரங்களில் சக கைதிகளுக்கு வாசிப்பேன். இல இரவுகளில் நான் வாசித்துக் கேட்க என்னை அடைப் பிவிருந்து வெளியே விட்டிருக்கிறார். விதிப்படி மாலை ஐந்தரை மணிக்கு எங்களைப் பூட்டி விடுவார்கள். அப்புறம் நாங்கள் விதிப்படி நம்பத்தக்கவர்களில்லை. ஆனால் என் விஷயத்தில் அவர் ரிஸ்க் எடுத்துக் கொன் டார். அவர் நல்லாயிருக்கணும். அந்த வெளி நேரங்களில் வாசிக்கும்போது எனக்கு ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு வேகம் வரும். காணாது கண்ட நேரம் அதில் மனம் குளிக்கும். தெம்பாவேன்.' நகடித்ரங்கள் விம்முகின்றன. கேட்கிறது. . நிலவின் தேன் அடிநாக்கில்-ஊறுகிறது. மையிருளைத் தொட்டுவிடலாம் அத்தனை...மெத்து அந்தராத்மாவின் குப்பி திறந்துகொண்டால் இத்தனை வாலங்களும் தோற்றங்களும் ஒருங்கே-வெளிப்படும் போலும்!