பக்கம்:பிராயச்சித்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 31 கடும்பாவம் சுற்றிக்கும். அன்னிக்கு என் கஷ்டத்தைக் *。 - - w 4. 4. > o கேட்ட அளவுக்கே, நீங்கள் எனக்கு உதவி செய்யப்போய் என்னைவிட ரொம்பவும் அனுபவிச்சுட்டேள்.” 'உஷ் அழாதே, கோமதி. நீ அழுதால் எனக்குக் கலகலத்துப் போகிறது. மூக்கை உறிஞ்சினாள். ஆனால் நான் யாரிடம் சொல்லிக்கொள்வேன்? இன்னிக்கு நீங்கள் கிடைச்சது எனக்கு என்ன பாக்கியம் தெரியுமா?" "ப்ளீஸ், அப்புறம்?" அவள் குரல் திடம் கொண்டது. என் சங்கோஜத்தைக் குறிப்பிட்டீர்கள். சங்கோஜம், மானம், கெளரவம்... இவை நிஜமான உணர்ச்சிகள் தானா? நாளடைவில், நாமா, அவாளவாள் அந்தஸ்துக்கும் கட்டுப்படிக்கும் தக்கப்படி ஏற்படுத்திக்கொண்ட லொகுஸ்ஸுக்களா? பிறக்கும்போதே ஆடையோடவா பிறந்தோம்? 'அருந்ததிபார்”- ஆகாசத்தைக்காட்டி- 'அம் மிமிதி'கல்லைக் காட்டி, "அக்னிசாr'- நெருப்பைக்காட்டி, மந்திரம் சொல்லி ஆசை காட்டி, பயம் காட்டி.அத்தனை யும் ஜாலக், ஜாலக், ஏமாத்து: உண்மையில் நாம் எங்கு இருக்கிறோம்? எனக்குப் பயமாயிருக்கு ஸார், என்னை விட்டுப் போயிடாதேங்கோ...ஆனால் அதோ அந்தக் குத்துவிளக்கு ஏன் ஸார் இன்னும் எரிஞ்சுண்டிருக்கு? எப்பவோ ஏற்றிவெச்சது.' "அங்கேதான் உலகத்தின் சூக்டிமமே அடங்கியிருக் கிறது. சுடர் எரிந்துகொண்டிருக்கும் வரை நமக்கு அழிவு கிடை யாது.” - மெளனம் அவர்களை மெத்தெனச் சற்றுநேரம் அணைத்தது. ஜன்னல் வழி தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவள் கன்னத்தில் கண்ணிர் பளபளத்தது. 'உன் ஆத்துக்காரர் உத்தியோகத்தில் இருக்காரா?”