பக்கம்:பிராயச்சித்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 35 "என்னை ஒருமுறை ஏற இறங்க முழிச்சுப் பார்த்தார். பதில் சொல்லவில்லை. பெட்டியோடு இறங்கிப் போய் விட்டார். என் கதையும் முடிஞ்சது. விடிஞ்சும் போச்சு. "ஆம், ஜன்னலுக்கு வெளியே வானம் நலுங்க ஆரம் பித்து விட்டது. "ஒண்னு அந்த மனுஷனிடம் ஆச்சரியம்; கோபமே வராதவர் ஸ்ார் அவர் . நான் அவரை வம்புக்கே இழுத் திருப்பேன். ஆனால் இழுபட மாட்டார். ஒரு தடவை கூடத் தன்னை மறந்து கையை ஓங்கினது இல்லை. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசினதில்லை. அதில் அவரை ஒரு ஆச்சர்யமாகவே கருதறேன். இப்போக்கூட அவர் மேலே எனக்கு முழுக் கோபம் இருக்கான்னு என்னை அடிக்கடி கேட்டுக்கறேன். முழுக்கோபம் இருக்கணும், இருந்தால் தான் ப்ரஸாந்தின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும்னு எனக்குத் தெரியறது.' "You love him?” - 'Love: சிரிப்பு மூட்டாதீங்கோ ஸார். பால்காரன் மணி எட்டக் கேட்கறது. போறேன். நீங்கள் சற்றே துரங்குங்கோ, இன்னும் நீங்கள் இமையே மூடல்லே." 'இல்லை, பல் தேய்க்கிறேன்.” "அதுவும் சரி. நல்ல Fresh காப்பி, இந்தப் பால்காரன் இப்போதைக்கு நல்ல பாலாக் கொடுக்கறான். ' பால்மணி 'ங்ண ங்ண வண' -பொறுமையின்றி ஒலித்தது.