பக்கம்:பிராயச்சித்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமாம், என்னேரம் இப்படி விட்டத்தைப் பார்த்த படி படுத்திருப்பது? "எனக்கு ஒண்ணு, உங்களுக்கொண்ணு- பச்சைக் குழந்தைமாதிரி இருக்கிறாள். சாவியைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். வகையாக மறுபடியும் மாட்டிக் கொண்டேனோ? எத்தனைக் கெத்தனைத் தனியாக ஒதுங்கப் பார்க்கி றேனோ அத்தனைக் கத்தனை உறவு துரத்துகிறது. நான் உறவுக்கு லாயக்கில்லை, எனக்கு அந்தப் பாக்கியமில்லை. பின் ஏன்? ஏன்?? ப்ரலாந்த் சற்றுப் பெரியவனாகி இருந்தால் எனக்கும் அவனுக்கும் இன்னும் சற்றே ஒட்டலாம். ஆனால் இந்தப் பருவத்தில் சரிப்படவில்லை. உண்மையை எனக்கே ஒளிப் பானேன்? எனக்கே குழந்தைகளுடன் இழைவதில் விருப்ப மில்லை. பிஞ்சில் பழுத்த வெம்பல். அதற்கும் பெற்றோர் தான் காரணம். இரண்டுபேரும் சுயநலத்தில் உத்யோகத் தைத் தேடிப் போய்விட்டால், குழந்தை இருவர் ஆதரவும் அற்று, தங்களுக்கே உதவாமல் போய்விடுகின்றது. ஆனால் தான் சரியாக இருப்பதாகத்தான் நினைத்துக்கொண்டி ருந் தேன். மரகத்தை வேலையில் விடவில்லை. ஆனால் எனக்கு ஏன் இப்படி ஆயிற்றும் இந்நாள் இதனால் இது