பக்கம்:பிராயச்சித்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 37 என்று காரணம் கூடக் காட்ட முடியவில்லை, No, No, No. இப்படிப் படுத்துக்கொண்டிருந்தால், யோசனையிலேயே உளுத்துப் போய்விடுவேன். எழுந்திரு, வெளியே செல். ஏதேனும் செய். கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டார். பையன் நர்ஸ்ரியிலிருந்து வருவதற்கு முன் திரும்பிவிட வேண்டும் . தெருவில் காலை மிதித்ததும்தான் நினைப்பு வந்தது. கையில் ஒரு செல்லிகூட இல்லை. எங்கே கிளம்புவது? அந்த நினைப்பில் ஜே.பியில் கை போனதும் காபிதம் மொட மொடத்தது. எடுத்துப் பார்த்தால் புத்தம் புதிது, இருபது ரூபாய் நோட்டு. மனம் ஒரு கணம் கோமதிமிேல் மின்னல் அடித்துப் பின் வாங்கியது. எப்படியெல்லாம் மடக்குகிறாள்: பாசக்கயிறை சுற்று சுற்றாய்க் கழுத்தில் போடுகிறாள்! ஆனால் அவளுடைய முன் யோசனை நன்றிக்குரியதுதான். என் நிலமையும் அப்படித்தானே இருக்கிறது. மேலே நடைக்குத் தைரியம் கண்டது. நேற்று அவள் சொன்னமாதிரி, ப்ளாட்ஃபாரம் கச்சேரி சம்பாவனை ஐந்து ரூபாய் தேறியிருக்குமா? கால் ரூபாய் நாணயங்கள் கூடப் பார்த்ததாக ஞாபகம். ஐயோ என் பிழைப்பே என் சந்தோஷமே! என் சிரிப்பே! பரமஹம்ஸர் சடலத்தை உதறிய பின், அவருடைய சிஷ்யர்கள் பல திக்குகளிலும் போனவர்கள், அவரவர் கையில் இருப்போடா போனார்கள்? சன்யாசி எனும் பேர், சன்யாசி வாழ்க்கை, அதுபற்றிக் கேட்க, படிக்க அதில் ஏதோ க்ளாமர் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் அனுபவிக்க மிக்க அதைரியமாகத்தானிருந்திருக்கும். பரம ஹம்ஸருக்கு என்ன குறைச்சல்! அவரை மதுர், இமைக்குள் அப்படிப் பொத்தித்தானே காப்பாற்றினான்!