பக்கம்:பிராயச்சித்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 லா, ச. ராமாமிருதம் சீ, உனக்கு என்ன துணிச்சல், வெட்கமாயில்லை? அவர், அல்லது அவர்கள் கால்தூசு பொறுவையா? மீண்டும் குருட்டு யோசன்ை, குருட்டு யோசனையை விடு. செயல்படு, செயல்படு. இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? கால் போன வழி, வழி போயிற்று. போகப் போக, பழக்கப் பட்ட இடங்கள் விரிவடைந்து கொண்டே போயின முற்றிலும் அழியாத சில அடையாளங்களால்தான் பழக் கப்பட்ட இடங்களாக பட்டன. சுற்றி சின்னதும் பெரிது மாகப் பல கட்டடங்கள் முளைத்துவிட்டன. முன்னேற ஏற போகும் இடம் திடமாயிற்று. ஆமாம், இன்னும் நன்டதுாரம்தான். பஸ் ஏற வே ண் டாம் அட, நடப்போமே. நாடாரின் பாத்திரக் கடைப் பக்கத்தில் மேலும் பாத்திரக்கடை முளைத்துவிட்டன. தெருவில் நின்றபடி, கடையுள் தெரிந்தவரை, நாடார் கல்லாவில் தென்பட வில்லை. உள்ளே இருக்கிறாரோ, இல்லை சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிருக்கிறாரோ? கடையுள் ஏறினார். கல்லாவில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான் , பிடுங்கிய கிழங்குபோன்ற அந்த முகஜாடை, யார் பையன் என்று கேட்கத் தேவையில்லை. பக்கத்தில் தாழ்வான முக்காலியில் ஆச்சி. பார்க்க முன்னைக் காட்டிலும் முடிந் தால் முன்னைக் காட்டிலும் ஒரு சுற்று பருமனா யிருந்தாள். வெள்ளை உடுத்து, நெற்றியில், குழைத்த பட்டைத் திருநீறு. 'திக் கென்றது. கல்லாவில் அவனை இழுத்துப் பிடித்துக் கட்டாயமாக உட்கார்த்தியிருந்தது அவன் முகத்திலேயே தெரிந்தது. கழுத்தில் தும்புதான் இல்லை. அதற்குப் பதிலாகத்தான்