பக்கம்:பிராயச்சித்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 39 ஆச்சி, அவிழ்த்துவிட்டால் புதுப்படம் முதல் காட்சிக்கு ஒடிவிடுவான். அப்படி ஓடிவிடாமல் இருக்கத்தான் அவன் அம்மை காவல் இருந்தாள். 'ஐயா வாங்க... எழுந்திருப்பதுபோல் பாவனை. அதற்குமேல் அந்த உடம்புக்கு இப்போது முடியாது. "என்னா வேனும்?' தயங்கி நின்றார். அடுத்தே அவள் கண்களில் அடை யாளத்தின் ஒளி வந்துவிட்டது. ஐயா, வாங்க, வாங்க! கொஞ்சம் அசந்து ட்டேன். பார்வை வேறே மந்தமா யிட்டுது. அமருங்க. அடே சாமிவேலு, நாக்காலி எடுத்து வா. ஐயா, நலமாயிருக்கீங்களா, நலிஞ்சு காட்டுது, உடல் சொகமில்லியா?” 'எனக்கு ஒண்னுமில்லை. ஆனால் ஆச்சி, உங்களை இப்படிப் பார்க்க நினைக்கல்லே.” "ஆ, ஆமாங்க, உங்களைப் பார்த்து வருசம் நாலிருக் குமா? அதுக்குள்ளே இப்படி நேர்ந்துபோச்சு. ஆனால் உதட்டைப் பிதுக்கவில்லை கண் சுரக்கவில்லை. அதனால் துக்கமில்லை என்று சொல்ல முடியுமா? தைரியமாகத் தாங்கிக்கொண்டிருப்பதற்குப் பாராட்ட வேண்டும். "அன்னிக்கிப் போலீஸ் உங்களைக் கூட்டியாந்து மாடியிலே உங்கள் அறையை சோதனை போட்டாங்களா இன்னங்கூட கண்ணெதிரே அந்தக் கோலம் நிக்கி. யார் மக்க அவஹ? அந்தத் தொலையாத ஜாமானைத் துர்க்கி எறிஞ்சி இடத்தைத் தலைகீளா, கறிகாய்க் கூடையை மசானக் கொள்ளை விடறு மாதிரியல்லக் கவிழ்த்துப் பார்த்தாஹ? என்னாத்தைத் தேடினா ஹ? அவங்க தேடினது கிடைச்சுதா இல்லியா? உங்களையும் கூடவே இளுத்துட்டுப் போயிட்டாஹளா?