பக்கம்:பிராயச்சித்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 லா. ச. ராமாமிருதம் வைக் காக்க வெக்கறே? சில்லறையா? என்னைக் கேக்கறது தானே? வாயிலே மூசுண்டையா? ஐயா பொறுங்க, இதோ ஒரு நிமிஷம்" இடுப்பிலிருந்து சொருகுப் பையை (சொருகும் பையா சின்னத் தலைகாணி உறையா?) எடுத்து சில்லரையைக் கொடுத்து ஆளை அனுப்பிவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். "ஆமா எங்கே விட்டது: ஆமா, எல்லாத்தியும்விட அவருக்குப் பெரிய இடி அந்த மகாலச்சிமித் தகடு, பூசை யிலே வெச்சிவந்தது, திடீர்னு காணாமல் போயிட்டுது. அதான், நாட்டிலே கனாவுலே உங்களைக் கண்டு, கனா வுலே, நீங்கள் காலால் மெறிச்சுக் காட்டிய இடத்துலே, புளக்கடையிலே தோண்டியெடுத்த தாமிரத் தகடு. மாகாலச்சுமிப் படம் வரைஞ்சது; ஆமானுங்க அது வந்த பிறகுதானே எங்க வீட்டுக்கு லச்சுமி கடாச்சம் வந்திருச்சி. தினமே அதுக்குப் பூப்போட்டு வணங்கிட்டுத்தான் இட்டிலியை விண்டு வாயிலே போட்டுப்பாரு: ஆமானுங்க திடீர்னு பூசையிலிருந்து பொசுக்குனு மறைஞ்சுட்டு துன்னா அதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கு எவன் திருடன் வருவான்? எலி இளுத்துட்டுப் போயிருக்குமா? இத்தினி நாளா இல்லாத எலி இப்போ எப்பிடி வரும்? தேடாத இடம் பாக்கியில்லே. தென்னை மரத்துலேகூடப் புல்லு பிடுங்கியாச்சு. ஆனால் கிடைக்கல்லேங்க. 'ஆனால் அவரு உங்களைத் தெய்வமாத்தான் கொண்டாடிட்டிருந்தாரு கனவுலே கண்ட மனுசன் நேரிலேயே மாடி அறையிலே குடியிருக்கத் தேடி வந்ததும் அதிலேயே அவர் உள் ள்ாறப் பாதி மலர்ந்துட்டார்னு நான் சொல்றேன், விளங்குதுங்களா? 'அவர் மட்டும் சொல்வார். செண்பகம் அவர் அப் பிடிப்பட்ட மனுசன் இல்லே. அவருக்கு யாராலோ ஏதோ தீம்பு ஆயிருக்கு ன்னு. அப்புறம் ஒரு தபா கோர்ட்டுக்குப்