பக்கம்:பிராயச்சித்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 43 போனாரா? கூண்டுலே ஏறி எங்க வீட்டு மாடி அறை யிலே தர்மராசன்னுபேர்லே குடியிருந்தவர் இவர்தான்னு’ அ.ையாளம் காட்டினாரா? திரும்பி வந்ததும் அவர் சொன்னதுதான். இல்லாட்டி எனக்கு எப்பிடித் தெரியப் போவுது? 'ஈதெல்லாம் சேர்ந்து மன்னன் மனசுலே புத்து வெச்சிடுச்சு. மனுசன் மண்ணை விட்டு மறைஞ்சும் போயாச்சு. ஆனால் ஒண்ணு...' ஆச்சி நிமிர்ந்து உட்கார்ந்தாள்-அவளால் முடிந்த வரை. 'முன்பின் பார்த்திராத மனுசன் ஒருவன் கனாவுலே வந்து காண்பிச்ச இடத்தில், நனாவுலே தோண்டிக் கண்டு எடுத்து அதைப் பூசையிலும் வெச்சாச்சு. வெச்சது பொசுக்குனு மறைஞ்சு போச்சுன்னா அதுக்கு என்ன அர்த்தம்? எங்கள் நாட்டுலே அதுக்கு வேறு பேர் சொல்லு வாஹ எங்கள் தாடு மலையாளச் சீமை பார்டர்தானே!' அப்போத்தான் அவருக்குச் சுறீல்' என்றது. நிமிர்ந்து உட்கார்ந்தார். ஆச்சி பேசி வந்ததெல்லாம் பாஷையே வேறு என்று உள் இறங்கிற்று. 'தாமிரத் தகடு திடீர்னு எப்படி வந்ததோ, அப்பிடியே திடீர்னு காணாமல் போச்சு. மொதல்லே அதுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது. சரி, கொடுத் தாச்சி. தவறு நேர்ந்துபோச்சு. பூவாடை அம்மன் காப்பாத்திட்டா. அப்புறமும் அதையே நெனச்சு நெனச்சு அத்தாலேயே முடிவும் காணுவானேன்? இப்ப மாடப் பிள்ளையார் எ ங் க ள் வீட்டிலும் இருக்குது. என் மாமனாருக்குப் பாட்டனாருக்குத் , தொகப்பனார் நாளி லிருந்து. அது மறைஞ்சு போயிடுச்சா? இன்னும்கூட அதன்