பக்கம்:பிராயச்சித்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 லா. ச. ராமாமிருதம் தலையிலே தண்ணியைக் கொட்டிட்டு ஒரு கட்டி வெல்லத்தையானும் நிவேதனம் வெச்சுட்டுத்தான் எங்கள் சோறு தண்ணி, "தகடு வத்ததிலிருந்து வாழ்வு வளம் பொங்கிச்சு, சரி, பொங்கட்டும். பொங்கவேண்டிய வேளை, பொங்கிச்சு. சரி, வந்த அதிஸ்டத்தைத் திடம் பண்ணிக்கிட்டோம். ஆனால் ஒண்ணு. இ. ப் பி டி த் தகடு, பொம்மை, மோதிரம்னு ஏதோ ஒரு உருவத்திலே வர்ர திடீர் அதிஸ்டம் எப்பவுமே நமக்குப் புரியாத ஒரு சூழ்ச்சின்னு நான் சொல்லுவேன். கொடுத்ததுக்கு வட்டியும் மொதலுமா வசூல் பண்ணாமே விடாது. நீங்களே பாருங் களேன், தகடு, தான் போற போக்கில், முதலாளியையே பலிவாங்கிடுச்சு, சதி பண்ணத்தானே வந்தது! "ஐயா, நிங்களைக் குறிப்பிட்டு நான் தனியா சொல் லல்லே. நீங்கள் அப்புறம் நனவாகி வந்தாலும், இப்போ என் எதிரே குந்திட்டுப் பேசிட்டிருந்தாலும் எங்களைப் பொறுத்தவரை, இல்லே என் மட்டும் பேசிக்கறேன், என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு கனாத்தானே! அதுவும் நல்ல கனா இல்லே, துர்க்கனா!' ஆச்சி படமெடுத்து ஆடவில்லை. தீண்டவில்லை. படத்தைக் கீழே அடித்து அடித்து விஷத்தைக் கக்குகிறாள். விஷம் பட்ட இடம் பொசுங்குகிறது. என்னைக் காண வேண்டித் தவம் கிடந்தாளோ? 'என்ன எளுந்தீட்டீஹ? பேச்சுலே பராக்கா மறந் துட்டேன். என்ன சோலியா வந்தீஹ?’’ "அது இப்ப அவசியமாப்படல்லே.' 'பரவாயில்லே, சொல்லுங்க. ' "அவர்தான் இல்லையே?’’