பக்கம்:பிராயச்சித்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 45 'அவர் இல்லாட்டி என்ன? நான் இல்லியா? உங்க மக மாதிரி. என்ன தயக்கம்? சும்மாச் சொல்லுங்க. முடிஞ்சா செய்யப்போறோம். முடியல்லே... என்னன்னு தெரியா மலே எப்படிச் சொல்றது?" 'ஒண்ணுமில்லே, நாடார் கிட்டே, கடையிலே கணக்கு எழுதற மாதிரி வேலை போட்டுக் கொடுப்பா ரான்னு கேக்கலாமா என்று வந்தேன்.'" 'அட கடவுளே, நல்லா வேளை பார்த்து வந்தீங்க, வியாபாரம் பழைய மாதிரி இல்லேங்க. சொணக்கமுங்க. பக்கத்திலேயே எத்தினி கடை வந்திருச்சு பார்த்தீங்களா? சக்களத்திமாரு.' சுணக்கமா? உள்ளே கூட்டம் நெரிந்தது. கஷ்டம் எல்லாம் பேர் எடுக்கும் வரையில்தான். அப்புறம் அலு மினியத்தையும் ஸில்வர் என்று காட்டிவிடலாம் தெரிந்தும் அப்படியே ஏற்க மக்கள் தயாராயிருக்கிறார் கள். பேருக்கு அத்தனை மவுசு. "இருந்தாலும் பரவாயில்லே. தேடிவந்திருக்கீய. வெறுங்கையா அனுப்பினால், அவர் கனாவுலே வந்து கோவிப்பாரு. உங்கள் மாதிரியும் நம்பகமா ஒரு ஆள் தேவைதான். சம்பளம் என்ன கேப்பீயன்னு உங்களை நான் கேட்கப் போவதில்லே. எனக்குக் கட்டுப்படி யானதை நானே சொல்லிடறேன். மாதம் இருநூறு...' 'என்ன ஆச்சி இந்த நாளில் ஒரு ஆள் இருநூறிலே சாப்பிட முடியுமா?, வாடகை கொடுக்க முடியுமா? "அதுவும் உண்மைதான். மூக்கை ஒரு விரலால் சொரிந்துகொண்டு யோசனை செய்தாள். சரி, ஒண்ணு செய்வோம். நம்ம வீட்டுலே கீழே புழக்கடைக் கோடியிலே ஒரு அறை இருக்குதுங்க. ஒலைக்கூரை தான். அதனால்