பக்கம்:பிராயச்சித்தம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 49 நினைத்தால் சிரிப்பேனா? அழுவேனா? உனக்கு என் அஞ்சலி, ஆச்சி உனக்கு அஞ்சலி. அவர்களுடன் சேர்ந்து என் நண்பனை நீ தூக்கி எறிந்திருந்தால்...? இல்லை இல்லை நாம் மீண்டும் இவ்வாறு சந்திக்க லபியில்தான், இப்படிப் பிரிந்திருந்தோம். நம் பிரிவுக்கு அஞ்சலி. நாம் அனாதைகள். ஆனால் நீ எனக்கு அனாத பந்தோ! நம் முதல் சந்திப்பு. அன்று ஒரு நாள்... இல்லை அது என்றோ ஒரு நாள். நீ சப்பாத்திப் புதரடியில் உருண்டு கிடந்தாய். உன்னை ஆக்கி, எந்தப் பிடாரன் எனக்காக உன்னை அவ்வாறு சப்பாத்திப் புதரடியில் விட்டுப்போனானோ, அல்ல நீ நழுவி விழுந்தாயோ அல்ல அவன் உன்னை மறந்தானோ அவனுக்கு அஞ்சலி. என்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள என்ன இருக் கிறது? குழவிப்பருவத்திலேயே தாயறியேன், தந்தை அறியேன். என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெரியப்பா இட்ட உயிர்ப்பிச்சை நான். அவரில்லாவிடில் எ ன் மே ல் எப்பவோ புல். பெரியப்பா, என் தந்தையே, என் தாயே, என் குருவே உங்களுக்கு அஞ்சலி. அஞ்சலியென்பது என்னென்று இப்போதுதான் புரிகிறது. பி.-4