பக்கம்:பிராயச்சித்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 லா. ச. ராமாமிருதம் போட்டுக்கொண்ட பிறகு ஜிப்பாவை விலாப்பக்கங் களில் இழுத்து விட்டாள். 'கொஞ்சம் தொளபுளாத்தான். உங்களுக்கு எப்படி யிருக்கு?’’ முறுவலித்தார். "என்ன ஸார், ரகளை பண்ணல்லே? எனக்குத்தான் துணிச்சல் வந்துடுத்தா? நீங்கள்தான் படிஞ்சு போயிட் டேளா" முறுவவித்தார். 'ஏதேனும் பதில் சொல்லுங்களேன்: ' 'சொல்ல என்ன இருக்கிறது? எனக்கு இப்போ தேவையாத்தானே இருக்கிறது!' மறுப்பு எதற்கு? அலைகள் மேலே பாய்கின்றன. பாயத்தான் பாயும். நான் அடியில் இருக்கும் பத்ரம், இருந்தவரை லாபம் என் செயலில் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. மித, மித, மிதந்து கொண்டேயோ, சாகத் துணிந்தவனுக்கு மட்டுமல்ல. மிதக்கத் தெரிந்தவனுக்கும் சமுத்ரம் முழங்கால் மட்டும்தான். தற்செயலாக கை, ஜேபியுள் போனதும் ஒரு நோட்டு மொட மொட. நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது. பொறுப்பில்லாத தலைமுறை. வங்கியில் வேலை செய்தால் ஒரு செளகர்யம். புது நோட்டு. 球 * 岑 இத்தனை நாட்களுக்குப் பின்விழிகள் துளும்பிவிட்டன. அவருடைய கண்ணிரின் ஸ்படிகத்தினுாடே அவள் புன் ன ைக ஜாஜ்வல்யம் வீசுகிறது.