பக்கம்:பிராயச்சித்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 லா. ச. ராமாமிருதம் "அப்போ நீதான்? அதைச் சொல்ல இந்நேரமா? எனக்குப் பார்வை ரொம்ப மந்திச்சுப்போச்சு. உடம்பில் சர்க்கரை அப்படிக் கூடிப்போச்சாம். இன்னும் பாக்கி ஆயுசைத் தள்ளி ஆகணும். வீட்டில் என்ன மூலைக் கொண்ணா தனித்தனி தலைவிரிச்சாடறதுகள். சமாளிக் கறதாயில்லை. அது கிடக்கட்டும். ஆமா அதென்ன பூஜை யிலே பங்கு கேட்டு, ஸாஸ்னம் காட்றேன்னு பயமுறுத்தி, ஒழுங்கா மூணு நாளைக்குக் கூட முத்துமழை பெய்யல்லே, வருடக் கணக்கிலே ஒரே அடியா தலை மறைஞ்சுட்டே? இதுதான் உன் உரிமை லக்ஷண மா? உன்னை நம்பி இரண்டு சனிக்கிழமை அம்பாளுக்கும் பூஜையே தப்பிப் போச்சு. நான் தர்மகர்த்தாகிட்ட பட்டபாடு! அப்பா உன் மாதிரி மனுஷாளிடம் நம்பிக் காரியத்தை ஒப்படைச் சால் வேறே யமனே வேண்டாம். நீயே எமதர்மராஜன் தானே!" "மன்னிச்சுக்கோ மணி "மன்னிக்கறது கிடக்கட்டும்-அதென்ன அப்படியே அம்பேல் ஆயிட்டே? என்ன ஆச்சு உனக்கு? உட்கார்ந்து பேசுவோமா? வரவர என்னால முடியல்லே, திடீர் திடீர்னு தலை சுத்தறது. நீ கூட சத்தே வாங்கினமாதிரி... என்ன ஆச்சு உனக்கு?’’ f : 5 "என்னவோ நேர்ந்துபோச்சு. சிறையிலிருந்து வந்தி ருக்கேன் ’ "அப்படின்னா?” "ஜெயில்.’ ‘என்னது? மணிக்குத் துரக்கிவாரிப் போட்டது. எட்ட தகர்ந்து உட்கார்ந்தான். "என்ன, எனக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்ன துக்குப் பரீவுை பண்ணிப் பாக்கறியா? என்ன உளர்.றே?’’ 'இல்லை மணி, உள்ளதைத்தான் சொல்றேன். மூணு வருஷம், விடுதலையாகி பன்னிரண்டு நாளாறது. *