பக்கம்:பிராயச்சித்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 57 'நம்பவே மாட்டேன். உனக்கென்ன சபலப்படற வயளா, நிலைமையா? திருடினையா, வரண்டினயா? இல்ல குத்தா, கொலையா?” 'ரெண்டும்தான்னு வெச்சுக்கோயேன்." 'அப்பா தலை சுத்தறது. வைத்தீ! அடே வைத்தீ!! 'என்னண்ணா? கர்ப்பக்ருஹத்திலிருந்து ஒரு அங்குட் டுவம் வெளிப்பட்டது. பையனல்லன், குள்ளன். முற்றிப் போன முகம். 'மாமாவண்டே காசு வாங்கிண்டு மாருதிக்குப்போய் ரெண்டு அயன் மாருதி ஸ்பெஷல் வாங்கிண்டு வா-வா, சீக்கிரம் தருமு, சில்லறையில்லை நோட்டுன்னு சாக்குச் சொல்லாதே. எவ்வளவு பெரிய நோட்டையும் மாருதிலே மூணே திமிஷத்துலே உடைச்சுடுவான். மாருதியா, கொக் கான்னானா? அப்படி ஒரு வியாபாரம். சரி உன்னைப் பத்தி சத்தே விபரமாச் சொல்லு. 'விஷயம் தெரிஞ்சு என்ன செய்யப்போறே மணி? விஷயத்தைத்தான் சொல்லிட்டேனே! சொன்னவரைக்கும் ஏத்துக்கோ.' - . "நான் உன்னை நம்பல்லே,’’ 'அதற்கு நான் என்னப்பா செய்ய முடியும், நீயே சொல். ' - "ஓஹோ, உண்மை விளம்பி தர்மராஜனா? அசுவத் தாமா ஹத: (குஞ்சர:) அப்போ உன் தேர்ச்சக்கரம் பூமியில் பதியல்லே, அந்தரத்தில்தான் நிக்கறதாக்கும்! நீ தான் உண்மையைச் சொல்விட்டியே!” . அவருக்குக் கோபம் வரவில்லை. அலுப்புத்தான் வந்தது. சரி, அப்படியே நீ உள்ளே இருந்துட்டு வந்ததாவே வெச்சுப்போம். உனக்காக அதை அப்பட்ட மா அப்படியே