பக்கம்:பிராயச்சித்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 லா, ச. ராமாமிருதம் அவள் தலையில் எழுதியிருக்கே? தர்மராஜா, விதி யாரை யும் விடல்லெ... எங்கே கிளம்பிட்டே, இவளைத் திட்டறது உனக்குப் பொறுக்கல்லியா?" 'உன் இஷ்டம் எப்படியேனும் வைத்துக்கொள். எனக்கு நேரம் ஆகிறது.' 'சரிதான் உக்காரப்பா. இந்த நேரத்தில் போய் என்ன வெட்டி முறிக்கப்போறே? தருமு, எனக்கு உடம்பு சரியில்லேடா. ’’ 'உடம்பைப் பார்த்துக்கொள் என்று சொல்வதைத் தவிர நான் என்ன செய்ய முடியும், நீயே சொல்!” 'அதென்ன அவ்வளவு சுலபமாத் தட்டிக் கழிச் 历L@L?”” 'உண்மையிலேயே நான் என்ன செய்ய முடியும்? பல வருடங்கள் கழித்து ஒரு முறை சந்தித்தோம். மறுபடியும் காலம் அழிந்து இப்போ. இதோ போய்க்கொண்ந்டியிருக் கிறேன். மீண்டும் எப்பவோ, இந்த நிலைமையில் என்ன சரீர ஒத்தாசைகூட என்னால் முடியும்?' 'உன் வாயிலிருந்தே அவள் வரவழைச்சுட்டாள். சரீர ஒத்தாசை வேனது செய்யமுடியும்." "புரியல்வியே மணி!" 'தர்மராஜா, உடம்பு ரொம்ப அலுப்பாயிருக்குடா: அதுவும் உன்னைப் பார்த்ததும் அலுப்பு கூடிப்போச்சு. 'அது என் ராசி போலும்: ' 'இன்னி பூஜையைக் கொஞ்சம் கவனியேன்-நான் சத்தே இளைப்பாறிக்கறேன்.' அவருக்குச் சற்றுத் திடுக்கிட்ட மாதிரி ஆகிவிட்டது. "என்ன மணி சொல்றே? ஸ்னானம் பண்ணாமல் அம்பாளைத் தொடறதா? மடி வஸ்திரம் இல்லை...'