பக்கம்:பிராயச்சித்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 லா. ச. ராமாமிருதம் "ஆமாண்டி குட்டி, எனக்கு மறந்து போச்சே, நமஸ்காரம் பண்ணு' தர்மராஜன் ஆசீர்வாதத்தில் கை கூப்பினார். 'என்ன அவ்வளவுதானா? குழந்தை நமஸ்கரிக் கிறாள், சில்லரையைத் தளர்த்து...' 'பழைய நிலையில் நான் இல்லேப்பா.'

  • சரி விடு. தானாக் கனியாததைத் தடியால அடிச்சுக் கனிய வெக்கறவன் நான் இல்லே. சரி, எதுக்கு நிக்கறே, ஸ்னானம் பண்ணப் போயேன்! ஜிப்பாவை இங்கே கொடு. தர்மராஜா, இதோ பார்த்துக்கோ, உன் ஜே.பியிலிருந்து பத்துருபா நோட்டு ஒண்னு எடுத்து, குட்டிக்கு உன் ஆசீர்வாதமாக் கொடுக்கறேன். அப்பறம் அதைக் கானோம் இதைக் காணோம் என்காதே. இத்தனை பணத்தை வெச்சுண்டா, பஞ்சைப் பாட்டுப் பாடறே? அத்ென்னமோ எனக்கு மனசு கேக்கல்லேப்பா. கன்யாப் பெண் நமஸ்காரம் பண்றா, வெறுங்கையோடு அனுப்பக் கூடாது. பத்து ரூபாய் ஏன் கொடுத்தேன்னு உன் கண் கேக்கறதே. வாய் பேசாட்டாலும், அதுக்கும் ஜவாப் இருக்கு. .ன் பழைய அஞ்சு ரூபாய்க்கு இந்த நாளில் என்ன கிடைக்கும்னு நெனச்சுண்டிருக்கே? உனக்கு எங்கே தெரியப்போறது? நீதான் உள்ளே இருந்துட்டியே! மாருதி விலாசுலே, அஞ்சு ரூபாய், ஒரு நெய் ரோஸ்டுக்கும் காப் பிக்கும் சரியாப்போச்சு. அப்புறம் ஒரு பீடாவுக்கு ஆசைப் பட்டால்கூட வழியில்லே. சரி, வேலையைப் பாரு!'

தர்மராஜனுக்கு அருவருப்புத் தட்டிற்று.

* 家

ஸ்பரிசம் என்றாலே இந்தக் கூச்சம், தன் மண வாழ்க்கையின் முறிவிலிருந்தா, அல்லது இயல்பான தன் தன்மையையே சேர்ந்ததா? இந்தக் கட்டத்தில் நிச்சய மாகச் சொல்ல முடியவில்லை. .