பக்கம்:பிராயச்சித்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 1. - ஆபீஸிலிருந்து கோமதி வீட்டுக்குத் திரும்பிக்கொண் டிருந்தாள். இன்று காலை, வழக்கம்போல் அவசரத்தில் வாரி முடிகையில், பின்னி தொங்கவிட்டுக்கொண்டு போன நாளெல்லாம் மறந்துகூட போச்சு. வலது காதோரம், வாரவில் நாலு நரை மயிர்கள் மின் எனப்பட்டு உடனேயே கூந்தல் அடையில் மறைந்துகொண்டன. மீண்டும் சோதிக்க நேரமில்லை. ஆனால் வாஸ்தவத்தில் அதுபற்றி கோமதிக்கு அக்கறையுமில்லை. இப்போ நடையின் அவகாசத்தில் பல குருட்டு யோசனைகளுக்கிடையே அந்த நினைவும் வந்து, கூடவே அது தொட்டு எழுப்பிய வேறு எண்ணங்களும் தொடர்ந்தன. ஆமாம் இந்த மூணு வருடங்களில் சோதனைகள் ஒண்ணா, ரெண்டா? இயல்பாகவே, கோமதிக்கு தன் தோற்றத்தில் கவனம் குறைவுதான். அதுபற்றி ஆபிஸில் பெண் சகாக்கள் ஜாடையாக நமுட்டினாலும், "குள் கொட்டிவிடுவாள். "ஆமா எனக்கு மறு சுயம்வரம் நடக்கப்போறதாக் கும்!” அப்புறம் அவர்களின் மேல் பேச்சுக்கு வழியில்லை. நாளுக்கு நாள் வாழ்க்கை என்ன யந்திரம், சே! என்னத்தையோ பொங்கி அள்ளிப் போட்டுண்டு, அதையே, கையிலும் கட்டிண்டு வேலையில் இறங்கினால்...