பக்கம்:பிராயச்சித்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 லா. ச. ராமாமிருதம் கர்ப்பக்ருஹத்துக்கு வெளியே, இரண்டு வரிசையாக நின்று, தரிசனம் பண்ணிக் கொண்டிருப்பவர்களையும் அந்த ஸான்னித்யம் கவ்விக் கொள்கிறது. வழிப் போக்கில் வந்தவர்கள் கூட ஜோலியிருந்தும், போக மனமில்லாமல் நிற்கிறார்கள். கற்பூரச் சுடர் ஓங்காரச் சுழியை எழுதி, அதனுள் அவளை அடைப்பது போலத் தட்டு அவர் கையில் வட்ட மிடுகையில் அம்ப்ாளின் மூக்குத்தி... அப்பப்பா! மயிர்கூச் செறிகிறது. நான் கமலாம்பிகை. உங்கள் காலத்தால் அளவிட முடியாத நித்திரை யிலிருந்து விழித்தெழுகிறேன். - -தர்மராஜன் தன்னையிழந்தார். நெற்றியில் குங்குமம் கண் திறக்கிறது. என்ன ஜாஜ்வல்லியமான புன்னகை! -தர்மராஜன் நெற்றி முத்திடுகிறது. நெஞ்சில் ரத்த நாளங்கள் புடைத்துக் கொள்கிள் றன. தர்மராஜன் முகம் குங்குமப் பிழம்பு. நினைவின் அலமாரித் தட்டுக்களில், ஒன்றிலிருந்து மேலே புற்று பூத்துவிட்டிருந்த ஒரு ஸ்லோகம், தன்யோகம் கலைந்து எழுந்து, சிறகு விரித்துக்கொண்டு நெஞ்சை மிதித்துக்கொண்டு குரலின் கணிரில் எழும்புகிறது; அம்பா ரெளத்ரிணி பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ ப்ரஹ்மாணித்ரி புராந்தகி ஸ"ரதுதா தேதீப்யமானோ ஜ்வலா சாமுண்டாஸ்ரித ரகrபோஷ் ஜனநீ தாrாயணி . . வல்லவி, சித்ரூபி பரதேவதா பகவதி ரீ ராஜ ராஜேஸ்வரி: