பக்கம்:பிராயச்சித்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 லir. ச. ராமாமிருதம் களுக்கு ஆசி சொல்லக்கூடத் தன் நினைப்பில் இல்லை; ஏதோ ஒரு விளிம்பில் ஏதோ ஒரு மயக்கம் அவரைத் தன் சுழிப்புள் ஈர்த்துக் கொண்டிருந்தது. "தருமு, இவர் தர்மகர்த்தாவாள். உன்னைப் பார்க் கணுங்கறா,’’ தர்மகர்த்தாவின் கரங்கள் கூம்பலில் எழுந்தன. *வணக்கமுங்க.' 'பிள்ளைவாள், என் உறவு மனுஷன் தஞ்சாவூர்ப் பக்கத்திலிருந்து வந்திருக்காப் போல. பிழைப்பைத் தேடி கஷ்டப்பட ற குடும்பம். உங்களிடம்தான் அழைச்சுண்டு வரணும்னு இருந்தேன். அதுக்குள் நீங்களே வந்துட்டேள்' கும்பிடப் போன தெய்வம்னு பழமொழியே இருக்கே!' ஒரு சிரிப்பு. "நீங்கள்தான் பெரிய மனசு பண்ணனும், ஒரு இடம் பார்த்துத் தரணும். அத்யயனம் பண்ணியிருக்கான். குழந்தையிலேயே என் தகப்பனார்தான் இவனை எடுத்து வளர்த்தார்.' 'ஓ, அப்படியா! அதுக்கென்ன, நாளைக்கு இவ ரோடு என்னை வந்து காணுங்க. சரி. வரேன்' மணி, தர்மகர்த்தாவுக்கு மாலை மரியாதை, நைவேத்யப் ப்ரசதாம், தனிக் கற்பூர தரிசனம் மரியாதையெல்லாம் தானே கவனித்து, வழியனுப்பி விட்டுத் திரும்பி வந்தான். வரும்போதே அனலைக் கக்கிக்கொண்டு வந்தான். 'ஏண்டா தருமு; தர்மகர்த்தான்னு சொல்றேன், இடிச்சபுளிமாதிரி நிக்கறியே, தத்தி!' "நான் என்ன செய்ய வேண்டும்?' அவருக்கு அவன் குரல் எங்கிருந்தோ வந்தாற் போலிருந்தது. என்ன செய்யனுமா? மனுஷனுக்கு ஒரு மரியாதை காட்ட வேண்டாமா?" அவர் எதிர்பார்க்கிற மரியாதையா, அவரைவிட நீ எதிர்பார்க்கிற மரியாதையா?"