பக்கம்:பிராயச்சித்தம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 69 'குசும்பைப்பாரு! உன் வயிற்றுப் பிழைப்பே அந்த மனுஷன் கையில்தான் இருக்குடா. நாளைக்கு எப்போ அழைக்கண்டு வரச்சொன்னானோ, வேலை மடியிலேயே விழுந்தமாதிரிதான்னு வெச்சுக்கோ. இத்தஅளவுக்கு இடம் கொடுத்து, படிஞ்சு இவன் பேசினதாக என் நினைப் பிலே இல்லை. உன் ஜாதகத்தை ஒருநாள் கொண்டு வாயேன், உனக்கு லக்னத்துலே குருவான்னு பார்க்கணும். "...இவன் எங்கே உனக்கு இடம் பார்த்திருக்கான்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. சைதை காரணிஸ்வரன் கோவிலில் ஒரு மாஸ்மா ஒரு இடம் காலியாயிருக்கு. மொத்தம் அஞ்சு அர்ச்சகாள் வெள்ளிக்கிழமையில் தீபாராதனைத் தட்டில் மட்டும் ராத்திரி பத்துமணிக்குச் சில்லறையை உத்தேசமா எண்ணினால் கூட இருநூறுக்குப் பஞ்சமில்லை. தலாப்பங்கு உனக்கு 40/- அதில் எனக்கு இருபது போனானும்-ஆமாம்; சோழியன் குடுமி சும்மா ஆடுமா?-உனக்கு இருபது மிஞ்சும். வலிக்கறதா? நீ, கணக்கிலே சில்மஷம் பண்ணே, அங்கங்கே ஆள் வெச்சிருக் கேன். முன்னாலேயே சொல்லிட்டேன், பின்னாலே மனஸ் தாபம் வேண்டாம் பாரு! என்ன ஊமைக்கோட்டான் மாதிரி வாயடைச்சுக் கிடக்கே? ஏதேனும் சொல்லித் தொலையேன்! எனக்கு ஒரு தாங்க்ஸ் கிடையாதா?’’ அவர் அமைதியாக, "நான் உன்னை வேலைக்குக் கேட்கவில்லையே!” 'கேட்கல்லியா?" கேட்கவில்லை. நன்றாக யோசித்துப் பார்த்துக் கொன் 'இத்தனை திமிரா? அப்போ என்ன பண்ணப் போறே??? 'அதுபற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை." 'உன் மனசுக்குள் என்னடா நினைச்சுண்டிருக்கே?"