பக்கம்:பிராயச்சித்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 7; 'அதானே வேண்டாங்கறது! முருங்கை மரத்துலே ஏறிக்கறியே! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அப்படி வேண்டாம்னு தள்றபடி என்ன சுகத்திலே இருக்கே? உன்னைச் சும்மா வேலை வாங்கினேன்னு இருக்க வேண்டாம். நீயும் சம்சாரிதானே. ஆனால் ஒரு நாள் கூட சம்சாரத்தை வீட்டுக்கு அழைச்சுண்டு வந்து இதுவரைக் காட்டினதில்லே. சரி அது போகட்டும். நீ வாங்கிக்காட்டா, ராப்பூரா எனக்குத் தூக்கம் வராது. ராப்பூராப் ப டு க் ைக யி ல் புரண்டுண்டே இருக்க வேண்டியதுதான். தாக்க மாத்திரை எனக்குப் பேசல்லே, தெரியுமோன்னோ? கமலாம்பா மனசுலே என்னைப்பத்தி என்ன வெச்சுண்டுருக்காளோ அது அவளுக்குத்தான் தெரியும். நடக்கறதுதான் நடக்கப் போறது. யாருக்கும் தடுக்க முடியாது. இந்தா நைவேத்யமும் எடுத்துக்கோ. சுண்டல் இன்னும் வேகனுமோ? அதுக்கினால் அரைப் பதமாத்தான் தோணறது. அவளுக்கு அக்கரை கிடை யாது வேளையில்லே பொழுதில்லே ராவில்லே பகலில்லே எப்படித்தான் அப்படித் துங்க முடியறதோ? அதுவே ஒரு வியாதியோன்னு தோணறது. மிச்சப் போதுக்கு சினிமாப் பத்ரிகைகள் பாராயணம் பண்றாள். சுண்டல் வெந்தால் என்ன வேகாட்டி என்ன அவளுக்கு? நான் ஏன் இப்படி ஆபிட்டேன்னா, இதனால்தான். சரி, விடு. தருமு. ஆப்பப்போ என்னை வந்து கவனிச்சுக்கோ. என்னைவிட நீதான் வயசுலே பெரியவன். ஆனால் நான் உன்னை முந்திண்டால் ஆச்சரியமில்லே. ஆமாம், வீட்டிலேயே மூணுவேளை தாண்டின விருந்தாளி ஆனபிறகு, இங்கே இருந்து என்ன ஆகணும்? சரி வரேன். குட்டி, பூட்டினையா? சாவிக் கொத்தைக் கொடு. இப்ப எல்லாம் சாவிக் கொத்தைச் சுலத்து சந்திலே வெக்க முடியாது. தெரியுமோன்னோ? எப்படியோ தர்மகர்த்தா கண்டு பிடிச் சுட்டான். சாவிக்கொத்தைத் தான் எடுத்து வெச்சுண்டு, தாள்பூரா அப்படி அலைக் கழிச்சிருக்கான் பாரு. அவன் லேசுப் பட்டவன் இல்லே. கிராதகன். அவள்தான்