பக்கம்:பிராயச்சித்தம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 லா. ச. ராமாமிருதம் அவனைக் கவனிச்சுக்கணும். என் பிழைப்பு இவாளை யெல்லாம் நல்லத்தனம் பண்ணிண்டு போகணும் சரி விடு. சரி வரேன், சரி குட்டி வா...' . . மணி பாவம், பேச்சில் பாதிப் பைத்யமாகிவிட்டான், தனக்குத்தானே பேசிக்கொண்டு, அவன் குரல் படிப்படி யாகத் தாரத்தில் ஒய்ந்த பிறகு வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். 欢 岑 菇 முதல் தட்டலிலேயே கதவு திறந்து கோமதியின் கவலை முகம் எதிர்கொண்டது. "என்னவோ ஏதோன்னு பயத்து போனேன் ஸ்ார். ட்ராஃபிக் எல்லாம் வரவர ரொம்ப மோசம். என்ன, சாப்பிட வேண்டாமா? என்ன ஸார், உடம்பு சரியில் லையா? இன்னிக்கு பத்தியச் சமையல்தான் ஸ்ார். மிளகு ரசம், மணத்தக்காளி வத்தல் எனக்காக ப்ளிஸ், ப்ளீஸ்...' 泳 察 岑 படுக்கையில் வெடுக்கென எழுந்து உட்கார்ந்தார். அரைத்துக்க மயக்கத்தில்- ஆனால் தூக்கமில்லை, கனவு போல்...ஆனால் கனவுமில்லை. அந்த மகுடமும் நாசிமேடு விளிமபின் கூர்மையும் இமைத்திரையில் ஒற்றிவிட்டுப் போன ப தி வு தா ன், நினைவைத் தட்டியெழுப்பி, விழிப்பைத் தந்து, கூடவே கற்கண்டு பாகைப் பழிக்கும் ஒரு த்வனிச் சரடு நுனி உட்செவியில் கோர்த்து வாங்கி, துர்க்கம் துறந்தது. உளிபிடித்த சிற்பியின் கையை அவள் கிருபைதான் பற்றி, அவள் இஷ்டத்தில் ஏற்கனவே உருக்கொண்டு விட்ட சிற்பத்தின் உருவக் கோடின்மேல், நுணுக்கங்களின் மேல் விளம்பியிருக்க வேண்டும். என்னை இப்படி வடி எனச் சொல்லாமல் காட்டும் செயல். இல்லை கனவில் வந்து சொன்னாளோ? இல்லையோ? இல்லை அவன் செதுக்கும்போது மருளாக வந்து அவன் தோளில் அமர்ந்து