பக்கம்:பிராயச்சித்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 லா. ச. ராமாமிருதம் "என்னை அடித்துத் துன்புறுத்தினது உள்படவா?’’ அது முழுவதும் என் கண்ட்ரோலில் இல்லை. அந்த சமயத்துக்குச் சில ஆளுங்க வெறிபிடிச்சவங்களாயிட நாங்க. அவங்க புத்தி நிலையிலேயே அவங்களுக்கு மாறி போயிடுது. ஆனால் நிஜத்தை ஆளிடமிருந்து வரவழைக் கணும்னா அவனிடம் கொஞ்சம் பலத்தைக் காட்டித்தான் ஆகவேண்டியிருக்குது. இல்லாட்டி அவன் ஏய்ப்பு வித்தைக் காட்டிடுவான். ஆனால் இந்த அடிக்குத்து உதை violence எந்த இடத்தில் எல்லை கடந்து போவுது என்கிறது தர்மா மீட்டர் வெச்சுப் பார்க்க முடியாத சமாச்சாரம்." "சரி. இப்போ என்ன சொல்ல வரீங்க?" 'உங்க விஷயத்துலே violence அந்த அளவுக்குப் போயிருக்க வேண்டாம். அதைத் தாங்கக்கூடிய தெம்பு உள்ள மனுஷன் நீங்க இல்லை. ஏதேனும் ஏடாகூடமா ஆயிருந்தால், என் பாடு ரொம்ப சீரியஸ் ஆகியிருக்கும். தவிர நீங்கள் hapitual criminal இல்லை. நீங்கள் செய்த முதல் குற்றமே அதுதான்னு எனக்கு நிச்சயம். நீங்கள் லாபத்துக்கு திருடற ஆசாமி இல்லே ஸார். எப்படி சொல்றேனனு கேட்டால் எனக்குத் தெரியாது. முகம் சொல்லுது எ ப் ப டி சொல்லுதுன்னு கேட்டால் தெரியாது.” “Oh Congratulations; Éléair orétamori'. Lists fri: Glou தால் நான் உங்களைப் பாராட்டணுமா?" சே, சே. நீங்க இஷ்டப்படி பேசlங்க, உங்க இஷ்டம். ஆனால் எனக்கு என்னைப் பத்தியே இதுதான் ஆச்சர்யம். உங்களை லார்’ என்கிறேன். அதுவே எனக்குப் புதுசு. எப்படியோ Respect command பண்றிங்க. உங்களுடைய warder என்னுடைய நண்பர். உங்களைப்பற்றி பிரமாதமா அப்பப்போ சொல்வார்; never mind. அவனவனிடம் உள்ள மனிதத்தன்மையை... அதுவும்