பக்கம்:பிராயச்சித்தம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 லா. ச. ராமாமிருதம் "விவரமாக அதிகம் இல்லை. தகையை ஸேட்டிடம் அடகு வைத்தது நான்தானா என்று கேட்டு ஆறுதிப் படுத்திக்கொண்டான். அந்த நகை திருட்டுப்போச்சு என்று அறிவித்தான். கிடைத்தால் அடையாளம் சொல்ல, கோர்ட்டுக்கு வர வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார்.’’ 'அவ்வளவுதானா?” 'அவ்வளவுதான்.'" அந்தமட்டுக்கும் லாபம்னு சந்தோஷப்பட வேண்டி யதுதான். உன்னைக் கோர்ட்டுக்கு இழுக்காமல் இருந் தானே!" 'இழுத்தால் என்ன? என்னை அவர்கள் என்ன கேட்க முடியும்?’’ 'ஏன், ஏற்கனவே நாம் ஒருவருக்கொருவர் தெரிந்தவர் என்பது வெளியானால், அவர்கள் ஏதேனும் முடிச்சுப் போட்டு உன்னையும் உடந்தையாக்கி இருப்பார்கள். உண்மையில் இந்தத் திருட்டுக்கும் உனக்கும் சம்பந்த மில்லை. ஆனால் சம்பந்தப்படுத்தி விடுவார்கள். அப் போது விசாரணை எப்படிப் போயிருந்திருக்கும் என்று சொல்ல முடியாது என்று தெரிந்துகொள். நியாயஸ் தலத்தில் நியாயத்துக்கும் உண்மைக்கும் சம்பந்தமில்லை. சட்டப்படி எது நிரூபணை ஆகிறதோ அதன்படி தீர்ப்பு.’’ தலை சுத்தறது. "சும்மாயிருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தானாம். தாதன் என்கிற மாதிரி என் செயலாகி விட்டது. அதன் ஆழம் எந்த பட்டும் பாயும் என்று எனக்குத் தெரிய வில்லை. நான் என்ன எண்ணத்தில் என்ன செய்தேன். நான் எண்ணியது என்ன, ஆனால் நடந்தது என்ன என்று: உனக்குத் தெரிய வேண்டாமா?'