பக்கம்:பிராயச்சித்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 லா, ச. ராமாமிருதம் "ஓ அப்படியும் ஒரு நிலைமையிருக்கிறதா? நெற்றி யில் அடித்துக் கொண்டார். “அது எனக்கு இதுவரை தோன்தவேயில்லையே!' “ளார். நான் அது பற்றிக் கவலைப்படவேயில்லை. அத்தோடு என்னைப் பிடித்த கெட்ட காலமும் விட்ட தென்றே நினைக்கிறேன்.' 'எனக்கு இப்போதுதான் ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டே வருகிறது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று உனக்கும் உபகாரமாயிருக்க வேண்டும். எனக்கும் நஷ்டம் இருக்கக் கூடாது என்று தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பதுபோல ஒரு திட்டம் போட்டேன் அது கோணிப் போனது நியாயம்தான். ஒன்று நன்றாக விளங்கிவிட்டது. நம் காயை நாம் நகர்த்துவதாக நினைத்துக் கொள்கிறது. காய் நம் கையால் நகர்கிறது. அதில் தான் ஏமாந்து போகிறோம். காயை நகர்த்தும் நம் கையை நகர்த்துவது நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி. அதற்கு ஆண்டவன் என்று பெயர் சொல்லி அழைக்கிறாயோ அல்ல வேறு ஏதேனும் அழைக்கிறாயோ நிச்சயமாக நாம் இல்லை. அதை நாம் மறுத்தாலும் அதன் அகண்ட கருணையில் நம் மறுப்பையும் அது ஏற்றுக் கொள்கிறது. அதுதான் அத னுடைய மஹிமை, நம்முடைய ஆச்சர்யம். சரி கோமதி என்னுடைய உரத்த சிந்தனையைக் கேட்க உன்னைக் கூப்பிடவில்லை. ஆனால் இனி நான் இங்கு இருப்பது புத்திகரமாகப் படவில்லை.” “என்ன ஸார் சொல்றீங்க? மறுபடியும் ஆரம்பிச் சர்ச் சா?’ ’ 'இல்லை கோமதி, இதை யோசித்துப் பார். நான் உன்னிடம் இருப்பது போலீசுக்குத் தெரிந்தால் நகையை எப்படியோ உன்னிடம் சேர்த்துவிட்டதாக, உனக்கும்