பக்கம்:பிராயச்சித்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 91 எனக்கும் முடிச்சுப் போட்டு, புதுக் கேஸ் ஜோடித்து விடு வார்கள். அது பழங்கதை என்று நீயும் நானும் சொல்ல லாம். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு கதைதான். ஓ, அவர்களுக்குப் புது கேலாகக் கொண்டு வரும் வழியெல்லாம் தெரியும். அநியாயமாகப் பழிக்கு என்னால் ஆவாய். நியாயம் என்கிற பேரில் என்ன நடக் கிறதென்று நினைக்கிறாய்? செய்த குற்றம் செய்யாத குற்றம் எல்லாவற்றுக்கும் சமுதாயத்தின் பழிவாங்கல் தான். ஓநாயும் ஆடும் கதை உனக்குத் தெரியாதா?’, 'ஸார், நீங்களாகவே பூச்சாண்டி காண்கிறீர்கள். ஏதாவது ஒன்று நேருமுன் அதை எதிர்கொண்டு அழைக் கனுமா? அட, அப்படித்தான் வரட்டுமே, ஆமாம், பல வருடங்களுக்குமுன் நாம் இருவரும் ஒரே இடத்தில் வேலை யாயிருந்தோம். பல வருடங்களுக்குப்பின் ஒருநாள் சந்தித்தோம். சந்திக்கக் கூடாதா? உடனே நகையுடன் தம்மை முடிச்சுப் போடணுமா? சரி, களவுக்கு நாம் சதி காரர்கள் என்றே குற்றம் கொண்டு வரட்டும். முதலில் நீங்கள் எடுத்ததாகச் சொல்லும் நகையை அவர்களால் உங்களிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்ததாக அது உங்களிடமிருந்து கைமாற உங்களுக்கு நேரமும் சந்தர்ப்பமும் உங்களுக்கு அவர்கள் கொடுக்கவில்லை." 'ஒரு வினாடிகூட அவர்கள் கவனத்திலிருந்து நீங்கள் தப்பவே இல்லையே! என்னத்தை அவர்கள் நிரூபிக்க முடியும்? சந்தேகமே தீர்ப்பு ஆகிவிட முடியுமா? அப்போ நாட்டில் சிறைகள் எல்லாம் நிரம்பி வழிய வேண்டியது தான். உங்கள் மூலம் பெரியவர்களிடம் தான் கண்ட குறை இதுதான். பெரிய திட்டம் போடுகிறீர்கள். அதற்கேற்ற படி எதிர்பார்க்கிறீர்கள். ஏமாற்றமும் பெரிதாகிவிடு கிறது. உங்கள் பயங்களும் பெரியதாயிருக்கு, எங்களுக்கும் திட்டங்கள் உண்டு. ஏமாற்றங்கள் உண்டு. துரோகங்கள் நேர்கின்றன. அதனாலேயே ஒரளவுக்கு ஏமாற்றமும்