பக்கம்:பிராயச்சித்தம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவம் மட்டும் அன்று அருளும் வாய்த்த சைத்ரீ கனால்தான் அத்தனை வேகமாக ஆச்சர்யமாக அந்த சித்திரத்தை அப்படிக் கண் எதிரிலேயே வரைகோட்டி லிருந்து கையை எடுக்காது, அதன் திக்கு மாறாது வரைய முடியும். ஆனால் சைத்ரீகனேயில்லை, சித்திரம் தன்னையே வரைந்துகொண்டது. இதோ ஏதோ ஒரு நுனியில்தான் சித்திரம் ஆரம்பித் தது. எதன் துனியென மனம் தன்னைக் கூட்டிக் கொள் வதற்குமுன் ஒரு சுண்டு விரல் தோன்றிற்று. கண்டு விரலை மோதிரமாக சுற்றிய பாம்புக்குட்டி, உடனே அதை வியப்பதற்கு நேரமில்லை. அப்பவே மற்ற விரல் களும் வந்துவிட்டன. அதைச் சேர்ந்த கை, தோள், உடனே சடாமுடி பரபரவெனக் கீழ் இறங்கி, முகம் கண்கள் மன மயங்கும் மந்தஹாசம், மோவாய்க் குழி கீழு மேலுமாய் வியாபித்து கண்ணைக் கசக்கித் திறப்பதற்குள் தாண்டவ மூர்த்தி உயிர் அளவுக்கு முழுமை அடைந்துவிட்டார். எப்படி-எப்படி? ஆச்சரியப்பட்டுக் கொண்டேயிரு. திரைச்சீலையில்லை. தூரிகையில்லை. அந்தரத்தில் ஒவியம் தன்னைத்தானே வரைந்து கொண்டுவிட்டது. இந்த அதிசயத்திலிருந்து மீளுமுன்னரே சித்திரம் விக்ரஹமாக மாறிப் பிதுங்கிற்று.