பக்கம்:பிறந்த மண்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - . . பிறந்த மண்

கொண்டு ஏதோ சொல்லத் தொடங்கியவர், முழுவதும் சொல்லி முடிக்காமல் சொற்களை இழுத்து நிறுத்தினார்.

“என்ன செய்யவேண்டும்! சும்மா சொல்லுங்கள்!"என்று தானும் சிரித்துக்கொண்டே கேட்டாள் காந்திமதி ஆச்சி, - o

'ஒன்றுமில்லை. உங்கள் மூத்த பெண்-இந்தக் குட்டி பகவதியைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பையன் அழகிய நம்பியின் நினைவுதான் வருகிறது. பேசாமல் இந்தப் பெண்ணை அந்தப் பையனுக்குக் கட்டிக் கொடுத்து விடுங்கள். சரியான ஜோடி. இப்போதே முத்தம்மாள் அண்ணியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டுவிடுங்கள். பையன் எந்த வருடம் கொழும்பிலிருந்து திரும்பினாலும் உடனே கல்யாணத்தை முடித்துவிடலாம்.”

மணியக்காரர் இந்தப் பேச்சைத் தொடங்கியபோது பகவதி தலையைக் குனிந்துகொண்டு உள்ளே ஒடிவிட்டாள்

காந்திமதி ஆச்சி உடனே பதில் சொல்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். ‘என்ன ஆச்சி? எதை யோசிக்கிறீர்கள்?'-ஆச்சியின் தயக்கத்தைக் கண்டு மணி யக்காரர் மீண்டும் தாண்டித் துளைத்துக் கேட்டார்,

'மணியக்காரரே! நல்ல. காரியமாக நல்ல நேரம் பார்த்து உங்கள் வாயால் சொல்லியிருக்கிறீர்கள். விதி பிருந்தால் நடக்கும். ஆனால் முத்தம்மாள் அண்ணி இந்தச் சம்பந்தத்திற்கு இணங்குவாளா என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆயிரமிருந்தாலும் நான் இட்லிக், கடைக்கர்ரி. என் பெண் அழகாயிருக்கலாம்; சமர்த்தாயிருக்கலாம்; அதெல்லாம்;வேறு விஷயங்கள்"...ஆச்சியின் பேச்சில் ஏக்கத் தோடு நம்பிக்கை வறட்சியின் சாயலும் ஒலித்தது. -

இல்லை ஆச்சி இந்தச் சம்பந்தம் அவசியம் நடந்தே ருேமென்று என் மனத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/102&oldid=596808" இலிருந்து மீள்விக்கப்பட்டது