பக்கம்:பிறந்த மண்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - பிறந்த மண்

காரியம்!"-என்று அந்த அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள் எதிரே வந்த மணியக் காரரைப் பார்த்ததும் புடைவைத்தலைப்பை இழுத்து விட்டுக்கொண்டு வழிவிட்டு ஒதுங்கி நின்றுகொண்டாள் அந்த அம்மாள். மணியக்காரர் நடையைக் கடந்து தெருவில் இறங்கிக் கோயிலை நோக்கிச் சென்றார்.

"வாருங்கள்! வாருங்கள்! ஏது அத்தி பூத்தாற்போலிருக் கிறது? இப்போதுதான் சிறிதுநேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே? ...” என்று வரவேற்றாள் காந்திமதி ஆச்சி.

'இந்தா பகவதி' அத்தை வந்திருக்கிறார்கள் பார்! வயதான பெரியவர்கள் வந்தால், சேவித்து ஆசீர்வாதம் பண்ணச் சொல்லவேண்டாமா?...”

உட்புறம் இருந்த பகவதி முகம்மலர ஓடிவந்து, “சேவிக் கிறேன் அத்தை'-என்று கூறிக்கொண்டே குனிந்து அழகிய நம்பியின் தாயை வணங்கினாள். குத்து விளக்குப் போல் இலட்சணமாக வளர்ந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்தபோது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஒரு மனப்பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்தம்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் ப்ார்த்துக் கொண்டே உங்கள் பெண்ணா? அதற்குள் ஆளே அடை யாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே'-என்று வியப் போடு ஆச்சியிடம் கூறினாள்.

"நீங்கள் எங்கே அதிகமாக வெளியில் வருகிறீர்கள்? நாம் சந்தித்திேஇரண்டு வருடம்போல் ஆகுமே! ஒரே ஊரில் ஊரில் சிறிய பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான், என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/104&oldid=596812" இலிருந்து மீள்விக்கப்பட்டது