பக்கம்:பிறந்த மண்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f04 - பிறந்த மண்

அவனுக்கு ஏற்படுமே ஒருவன்கப் பயமும், கூச்சமும்; அவை

சோமுவுக்கு ஏற்பட்டன. அதுவும், வந்து உட்கார்ந்தவர்கள் பெண்களாக வேறு இருக்கவே, அவனுடைய கூச்சம்இரண்டு முட்ங்காகிவிட்டது. + . -

'தம்பி, நீங்கள் பிேசிக்கொண்டிருங்கள். நான் இப்படி இந்தக் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்”-என்று அழகியநம்பியிடம் சொல்லிக்கொண்டு கடற்கரை ஓரமாக நடந்தான். மேரியும் லில்லியும் சோமுவை ஏறிட்டுப் பார்த்தார்கள். அவன் சிறிது நடந்து சென்றதும் அழகியநம்பியிடம் அவன் யாரென்று கேட் டார்கள். சோமு யார் என்பதை அவர்களுக்கு விளக்கினான் அழகியநம்பி,

அதுசரி இப்போதாவது நீங்கள் உங்களுடைய முகவரி யைச் சொல்லப்போகிறீர்களா இல்லையா? - என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டு கேட்பவளைப் போலக் கேட்டாள் மேரி. ---

மேரியின் கண்களைக் கூர்ந்து நோக்கினான் அழகிய நம்பி, சற்றே மலர்ந்த பெரிய கண்கள் அவை அவள் எப்போது பேசினாலும், எதைப்பற்றிப் பேசினாலும் அந்தப் பெரிய கண்களில் ஒருவித ஒளி-ஒருவகை உணர்ச்சித் துடிப்பின் சாயை-மின்னுவதை அவன் கவனித்தான்.

"என்ன? மேரியின் முகத்தை அப்படி விழுங்கிவிடுகிறாற் போலப் பார்க்கிறீர்களே?” - என்று சிரித்துக்கொண்டே அவனை வினவினாள் லில்லி அழகியநம்பி புன்னகை செய்தான். - - -

"வேறொன்றுமில்லை! உங்கள் தங்கையின் அழகிய பெரிய கண்கள் தாமரை இதழ்களைப்போல் இருக்கின்றன. அந்த அழகைப் பார்த்தேன்."- - - *நல்லவேளை! நீங்கள், நான் முகவரி கேட்டதற்குப் பதிலே சொல்லாமல் என் கண்களைப் பார்க்கவும் எனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/106&oldid=596816" இலிருந்து மீள்விக்கப்பட்டது