பக்கம்:பிறந்த மண்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 105

சந்தேகம் உண்டாகிவிட்டது. ஒருவேளை உங்கள் முகவரி என்னுடைய கண்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக் கிறதோ என்று நினைத்தேன். -குழந்தையைப் போலக் குலுங்கக் குலுங்க ஒரு கிண்கிணிச் சிரிப்பு. குழந்தைத்தன மான பேச்சு, மேரியின் அந்தச் சிரிப்பிலும், பேச்சிலும் ஒரு கவர்ச்சியைக் கண்டான் அழகியநம்பி. -

"இதோ என் முகவரி..." ஒரு துண்டுக் காகிதத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்து அதில் தன் முகவரியைக் குறித்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக் கொண்டு 'நன்றி'-என்றாள் மேரி, -

வில்லி பேச்சில் கலந்துகொள்ளாமல் கடலின் பக்க மாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவளிடம் ஒரு மென்மையான மாறுதல்-நுணுக்கமான அயர்ச்சி-உண்டாகியிருப்பது போல் தோன்றியது அவ னுக்கு. அது தானாக நினைத்துக்கொள்ளுகிற பிரமையோ -என்று ஒரு கணம் தனக்குத்தானே ஐயமுற்றான் அவன். லில்லிக்குத் தெரியாமலே பின்னும் அவளை நன்றாக உற்றுப் பார்த்தான். அவனுக்குத் தோன்றியது பிரமை யில்லை, உண்ம்ைதான்! கண்ணாடி மண்டபத்தில் ஊதிய ஆவி படிந்திருப்பதுபோல் அந்த மெல்லிய சலனம் லில்லியின் முகத்தில் இருந்தது.

அழகியநம்பி சிந்தித்தான். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தவள் இருந்தாற்போலிருந்து இப்படி மாறுதல் அடையக் காரணமிென்ன என்று மண்டையைக் குழப்பிக்கொண்டான். அவனுடைய உள்மனம் அவனுக்குச் சரியான சாட்டையடி கொடுக்கத் தொடங்கியது. அடே! முட்டாள் உனக்கு வயதாகி என்ன பயன்? இரண்டு பெண் களுக்கு நடுவில் எப்படிப் பேசிப் பழகவேண்டுமென்று கூடத் தெரியவில்லையே! உடன் பிறந்தவர்களாகவே இருக் கட்டுமே! ஒருத்தியின் கண்கள் அழகாக இருந்தால் அதைப் பேசாமல் உன் மனதிற்குள் நினைத்துப் பாராட்டிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/107&oldid=596818" இலிருந்து மீள்விக்கப்பட்டது