பக்கம்:பிறந்த மண்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - பிறந்த மண்

போக வேண்டியதுதானே? அதை ஏன் இன்னொருத்தியிடம் கூறினாய்? பெண்ணின் இதயம் உனக்குத் தெரியாதா? மோந்து பார்த்த அளவில் வாடிப்போகும் அனிச்சமலரைக் காட்டிலும் மென்மையான பெண்ணுள்ளம் ஒரு சொல்லில் வாடி விடுமே.”

அழகியநம்பிக்குத் தன் தவறு புலனாகியது. உணர்ச்சி வசப்பட்டு விளையாட்டுத் தனபாகப் பேசிவிட்டதை உணர்ந்தான். உலகம் முழுவதும் பெண்ணின் மனம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நிற்ம், உடை, மொழி, நாகரிகம், பழக்க வழக்கங்கள்,-எத்தனை வேறுபாடுகள் தான் இருக்கட்டுமே. பெண்ணின் உள்ளமும், அடிப்படையான உணர்ச்சிகளும் மாறுவதே இல்லை.

லில்லியைப் பழையபடி கலகலப்பான நிலைக்குக் கொண்டு வருவதற்கான் முயற்சிகளைச் சிரிப்பின் மூலமும் பேச்சின் மூலமும் செய்யத் தொடங்கினான் அவன்.

"மிஸ் லில்லி அந்தக் கடலுக்குக் கிடைக்கும் பாக்கியம் எங்களுக்குக் கொஞ்சம் கிடைக்கக்கூடாதா? நீண்ட நேர மாகக் கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? எங்களையுந்தான் கொஞ்சம் பாருங்களேன்."

லில்லி திரும்பினாள். அழகியநம்பி சிரித்துக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு பதிலுக்கு அவளும் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முழுமை இல்லை. எதையோ மறைத்துக்கொண்டு முகத்துதிக்காகச் சிரிப்பதுபோல இருந் தது. ஆனால் அழகியநம்பி அந்தக் குறையைத் தன் மனத் திற்குள்ளேயே வைத்துக்கொண்டு, 'நீங்கள் நன்றாகச் சிரிக்கிறீர்கள். உங்கள் சிரிப்பு என் இதயத்தைக் கொள்ளை கொள்ளுகிறது’-என்று மேலுக்குப் புளுகினான். லில்லியின் முகம் மெல்ல மலர்ந்தது.

திடீரென்று மெளனம். திடீரென்று மகிழ்ச்சி. அந்தப் பெண் புதிராகத்தான் இருந்தாள், “அடிாடா! இப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/108&oldid=596820" இலிருந்து மீள்விக்கப்பட்டது