பக்கம்:பிறந்த மண்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108. பிறந்த மண்

பருப்பைக் கொரித்தபடி கடலைப் பார்த்துக் கொண்டிருந் தான் அவன், - -

“ஏ சோமு!” என்று அவனை இரைந்து கைதட்டிக் கூப்பிட்டான் அழகியநம்பி. கடல் அலைகளின் ஒசையிலும், காற்றோசையிலும் சோமுவுக்கு அந்தக் குரல் கேட்கவே' இல்லை. "நான் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேனே"-என்று துள்ளிக் குதித்து ஒடினாள் மேரி. வெள்ளை கவுன் அணிந்த அவள் புல் தரையில் துள்ளி ஒடுவதுவெண் சிறகோடு கூடிய அன்னமொன்று வேகமாகப் பறந்து செல்வது போல் தோன்றியது அழகியநம்பிக்கு - ‘மேரிக்கு எப்பூேரதுமே சிறுகுழந்தைத்தனம் அதிகம். இன்னும் குழந்தைப் புத்திதான்"-வில்லி புன்னகையுடன் அவனை நோக்கிக் கூறினாள். அதைச் சொல்லும்போது அவள் முகத்தை வேண்டுமென்றே உற்றுப் பார்த்தான் அவன். லில்லி சாதாரண மனவுணர்வோடு மட்டும் அந்த வார்த்தைகளைச் சொன்னதாகத் தோன்றவில்லை அவனுக்கு, தான் தெரிந்து கொள்ள. வேண்டுமென்றோ தனக்குத் தெரிவிக்க வேண்டுமென்றோ, ஏதோ ஒன்றை அந்தச் சொற்களில் அவள் மறைத்துக் கூறுவதுபோல் உணர்ந்தான். வேண்டுமென்றே மிேரியின் குழந்தைமையைச் சுட்டிக்காட்டி லில்லி தன் நிலையை அவன் உயர்வாக நினைக்கச் செய்வதற்கு முய்ல்வது போலிருந்தது.

பெண்களின் உள்ளத்தில் இயற்கையாக எழும் துணுக்க மான பொறாமையைக் கண்டு மனத்திற்குள் சிரித்துக் கொண்டான் அவன். நீ எனக்கே உரிமை - எனக்கு மட்டும் தான் உரிமை என்று வற்புறுத்திச் சொல்லாமல் சொல்லு வது போல் இருந்தது, அப்போது அவள் அவன் பக்கத்தில் நின்ற விதமும், கூறிய சொற்களும் உரிம்ை கொண்டாடிய முறையும் - .

இரண்டே நிமிடத்தில் சோமுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டிாள் மேரி, அந்த வெள்ளைக்காரப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/110&oldid=597132" இலிருந்து மீள்விக்கப்பட்டது