பக்கம்:பிறந்த மண்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - *

சிரித்துக்கொண்டே தன்னைத் தேடி வந்து கூப்பிட்டுச் சென்றபோது சோமுவுக்கு ஏற்பட்ட பெருமிதம் அவனை இலங்கைக்கு மன்னனாக முடிசூட்டியிருந்தால் கிட ஏற்பட்டிருக்காது. . r- ټ:ي:ه هْ

புல்வெளியில் ஓர் ஒரமாக நிறுத்தியிருந்த தங்களுடைய காருக்கு அவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள் மேரியும் லில்லியும். அழகான நீலநிறக் கார் அது. மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் கண்ண்ாடிபேர்ல் மின்னிக் கொண்டிருந்தது அந்தக் கார்.

'ஏறிக்கொள்ளுங்கள் போகலாம்."-மேரியின் சிட்டின் கதவை அவனுக்காகத் திறந்துவிட்டாள். அழகியநம்பியும் சமையற் கார சோமுவும் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்ட்ார்கள். வழுவழுவென்று மென்மையாக இருந்த ஸ்பிரிங் மெத்தை உடலைத் தூக்கிப்போட்டது.மேரியும் லில்லியும் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தார்கள். மேரிதான் காரை ஒட்டினாள். . . . . . .

காரில் போவது போலவா இருந்தது? ஏதோ புஷ்பக் விமானத்தில் சவாரி செய்வது மாதிரி இருந்தன. அந்தச் சில விநாடிகள். நாலைந்து நிமிடங்களில் கார் ஹோட்டன். வாச்லில் போய் நின்றது. மேல்நாட்டு முறைப்படி நடத்தப் படுகிற ஹோட்டல் அது. கணவனும் மனைவியுமாககாதலனும் காதலியுமாக-நண்பரும் நண்பருமாக-பல்ர் வந்தும் போய்க் கொண்டும் இருந்தனர். கேளிக்கை நடனங் களுக்குரிய மேலைநாட்டு வாத்திய இசைக் கருவிகள் முழங்கிக் கொண்டிருந்தன. இந்தியர்கள்-தமிழர்கள் அந்த ஹோட்டலில் அதிகம் காணப்படவில்லை.வெள்ளைக் கார ஆண் பெண்களின் கூட்டத்தையும், அங்கே ஒலித்த இசையொலியையும், பலவிதச் சுருட்டுகளின் புகை மண்டலங்களிற் கிளம்பிய நெடியையும் கண்டு உள்ன்ே நுழைவதற்கே கூச்சமும் தயக்கமும் அடைந்தான் சமையம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/111&oldid=597138" இலிருந்து மீள்விக்கப்பட்டது