நா. பார்த்தசார்தி 111
'தம்பி இப்போதே திரும்பினால்தான் போய் உடனே என் சமையல் வேலையைத் தொடங்கலாம். நான் போய்த் தான் இராத்திரிச் சமையலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”-என்று அழகியநம்பியின் காதருகே இரகசியம் பேசுவதுபோல் மெல்லக் கூறினான் சோமு.
அவன் சொல்லியதை அவர்களுக்குச் சொன்னான் அழகியநம்பி. "பரவாயில்லை. அப்படியான்ால் ஒரு காரியம் செய்யலாம். மேரி! நீ நம்முடைய காரில் இந்த ஆளை ஏற்றிக் கொண்டு போய் விட்டுவிட்டுத்திரும்பி வா. அது வரை நான் இவரோடு கடற்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்"- என்றாள் வில்லி.
மேரி அதற்கு மறுமொழி கூறவில்லை. தயங்கி நின் றாள். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அழகியநம்பி இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித் தான். அவனுக்கு இருவர் மனநிலையும் நன்றாகத் தெரிந்தது மேரியை அனுப்பிவிட்டு அவனோடு சிறிதுநேரம் தனிமையாகப் பேசவும் பழகவும் லில்லிக்கு உள்ளுர ஆசை. அழகியநம்பியை அக்காவுடன் விட்டுச் செல்ல விருப்பு மில்லை மேரிக்கு . .
வீணாக நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள் வில்லி நாங்கள் இருவருமே புறப்பட்டுப் போகிறோம். இனிமேல். இவ்வளவு இருட்டியபின் கடற்கரையில் தனியாக உட்கார்ந்து என்ன பேசப்போகிறாம்? இன்னொரு நாள் நாமெல்லாரும் கடற்கரையில் சந்தித்தால் போயிற்று இப்போது நீங்களும் மேரியும் வீட்டிற்குச் செல்லுங்கள். 'நானும் சோமுவும் பஸ்ஸில் போகிறோம்.”
'இல்லை! இல்லை! பஸ்ஸில் போகவேண்டாம். உங்கள் இருவரையும். எங்கள் காரிலேயே கடிையில் கொண்டுபோய். விட்டுவிட்டு அப்புறம் நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்"என்றாள் மேரி -