பக்கம்:பிறந்த மண்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - பிறந்த மண். கூடப் பார்த்துக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாயிருந்' தான் . . . அவன் பார்த்தமட்டில், கேள்விப்பட்ட மட்டில் பூர்ணா என்ற பெண்ணின் குணச்சித்திரம் அவன் மனத்தில் எந்த் அளவு உருவாகியிருந்ததோ, அதன் விளைவுதான் அவன் பயம்! " - - - .

- கல்லூரியில் படித்த தமிழ்ப் பாடப்பகுதிகளிலிருந்து ஒரு செய்யுள் வரி அவனுக்கு நினைவு வந்தது

. 'உற்ங்குமர்யினும் மன்னவன் தன்னொளி

கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்.” அரசன் தாங்கிக்கொண்டிருந்தாலும் அவனுடையஆற்றலின் ஒளி அவனால் ஆளப்படுகின்ற பிரதேசம் முழுவதும் திங்கோ, தவறோ, நேர்ந்துவிடாமல், காத்துக்கொண் டிருக்கும்’ என்பது இதனுடைய கருத்து. இதுபோலவே பூர்ணர்வின் சாகச ஒளியின் ஆற்றல் அந்த அறை முழுவதும் நிரம்பியிருப்பதுபோல் ஒரு மனப்பிரமை ஏற்பட்டிருந்தது அவ்னுக்கு. • ,

அந்த மனப்பிரமை நீங்குவதற்கு அரைமணி நேரம் பிடித்தது. அதன் பின்பே எழுந்திருந்து அறையைச் சுற்றிப் பார்க்கும் துணிவு அவனுக்கு உண்டாயிற்று. பூர்ணா சுபா வத்தில் நல்லவளா? கெட்டவளா, சூழ்ச்சிக்காரியா, நேர்மை யானவளா? இவற்றையெல்லாம் பற்றி அவன் த்ன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவளுடைய அலுவலக அறையை அவள் நன்றாக வைத்துக்கொண்டிருந்த்ாள் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். காகிதங்கள், ரசீதுப் அத்தகங்கள், பைல் கட்டுகள், கடிதங்கள்-எதுவும், எவை யும் தாறுமாறாக மூலைக்கு மூலை சிதறி வைக்கப்பட்டிருக்க வில்லை. அவையவை உரிய இடங்கள்ல் இழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன- " " - عي : , . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/116&oldid=597149" இலிருந்து மீள்விக்கப்பட்டது