பக்கம்:பிறந்த மண்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

líð பிறந்த மண்

எதற்காக எழுந்து நின்றோம் என்று பின்னால் நிதானமாக இணைத்துப் பார்த்தபோது அவனுக்கே ஏனென்று விளங்க வில்லை! -

ஒன்றும் புதிதாக நடக்காததுபோல் அவன் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனிக்காமல் தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அந்தப் பெண் புலி. அவள் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்வதைப் போல் தோன்றியது அவனுக்கு, ஒரே க்னம் அவனுடைய மனம் கொதித்தது. ஆண்பிள்ளையின் இயல்புகளான தன் மானமும் ரோஷமும் அவன் மனத்தை முறுக்கேற்றின. ஆனால், அவை நிலைக்கவில்லை. தன்னடக்கமாக உணர்வுகளை அமுக்கிக் கொண்டான். வாழ்க்கையில் அந்த இளம் வயதிற்குள் ளேயே துன்பங்களை ஏராளமாக அனுபவித்துப் பண்பட் டிருந்த அவன் மனம் அவனுடைய கணநேரத்து ஆத்திரத் தைத் தணித்து அவனைப் புத்திச்ாலியாக்கியது. சுளித்த முகம் மலர்ந்தது. இறுகிய உதடுகளும் நெகிழ்ந்தன. மிஸ் பூர்ணா குட்மார்னிங்'-என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய் குரலைக்கேட்டு தலை நிமிர்ந்து அப்போதுதான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான-சூடு நிறைந்த பார்வை அது சிரித்துக்கொண்டே அந்தப் பார்வையைத் தாங்கி அங்கிருந்த வெப்பத்தை மாற்ற முயன்றான் அவன்.

பூர்ணாவின் பார்வை அவனுடைய சிரித்த முகத்தைக் கண்டு முற்றிலும் மாறிவிடவில்லையென்றாலும் அதிலிருந்த கடுமை சிறிது குறைந்தது. வேண்டா வெறுப்பாக, குட் மார்னிங்’-என்று பதிலுக்கு முணுமுணுத்தாள். விரட் டியோ, மிரட்டியோ அவனை வழிக்குக்கொண்டு வருவ -தென்பது இயலாத காரியம் விட்டுக் கொடுத்துப் பணிவது போல் நடந்துதான் அவளைப் பணியவைக்க முடியுமென்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன்.அவளிடம் தன்ன்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/118&oldid=597246" இலிருந்து மீள்விக்கப்பட்டது