பக்கம்:பிறந்த மண்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீரி. பார்த்தசாரதி 119

பூர்ணா அழகியநம்பியிடம் நேரில், “ந்ான் உங்களுக்கு ஒரு துன்பமும் செய்யமாட்ட்ேன்'-என்று முகத்துதிக்காகச் சொல்லியிருக்கவேண்டும். அன்று முழுதும் அவள் அவனிடம் நடந்துகொண்ட விதமென்னவோ, அதிகார மிடுக்கையும் மமதையையும் காட்டுவதாகவே இருந்தது.

முதல் வேலையாக அவளுடைய மேசை நாற்காலிக்குப் பக்கத்தில் ஒட்டினாற்போலச் சரிசமமாகப் போட்டிருந்த அவன் மேசை நாற்காலியை இடம் மாற்றிப்போடச் செய் தாள் அவள். அவள் உட்கார்ந்த இடததைவிட்டு நகராம்ல் அவனைக் கொண்டே அந்த வேலையைச் செய்வித்தாள்.

உங்கள் மேசை நாற்காலியை அப்படிக் கதவோரமாக எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதுதான். நீங்கள் இருக்கவேண்டிய இடம்.உங்கள் மேசையிலிருக்கும் பைல்கள் லெட்ஜர்களை எல்லாம் இப்படி எடுத்துக் கொடுத்து விடுங்கள். அவ்ற்ன்ற நீங்கள் இப்போது பார்க்கவேண்டிய் அவசியமும் இல்லை. உங்களுக்குப் பழக்கமும் போதாது. இப்போதைக்கு, நான் சொல்லுகிற வேலைகளை மட்டும் நீங்கள் கேட்டால் போதும்.” w

அந்த அதிகாரக் குரலின் வேகம் அவனை பியூனாக' நினைத்துக்கொண்டு பேசுவதைப் போல் இருந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே தன் மேசை நாற்காலியை அவள் சொன்ன இடத்தில் எடுத்துப் போட்டான். அவள் விருப்புப்படி தான் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த 'பைல் முதலியவற்றைப் பார்க்காமலேயே அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

- “. தோ இந்த ஊதுபத்திகளைப் பொருத்தி ஸ்டாண் டில் வையுங்கள்.' ". . . . . . .

வாங்கிப் பொருத்தி வைத் தான்.

இதோ இந்தக் கவர்களுக்கெல்லாம் ஸ்டாம்ப் இட் டுங்கள்." . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/121&oldid=597256" இலிருந்து மீள்விக்கப்பட்டது