உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிறந்த மண்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 123

விடும். ஆரம்பத்தில் நானே அவளுக்குக் கீழ்ப்படிந்து, போவது சரியென்று எனக்குத் தோன்றியது. அதுதான் இப்படி மாற்றிக் கொள்வது போல மாற்றிக்கெர்ண்டேன். இதனால் என்னுடைய கண்காணிப்பில்-அல்லது கவனிப் பில் ஏதாவது குறை நேருமோ என்று நீங்கள் பயப்பட வேண்டாம்.” -

அழகிய நம்பி எதை முதலிலேயே அவரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சொல்வதற்கு தயங்கினானோ அதைச் சொல்லிவிட்டான், பிரமநாயகம் பதில் சொல்ல்ா மல் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். என்ன. நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை.

சரி சரி! நீ விவரம் தெரிந்த பையன். இதற்குமேல் உன்னை வற்புறுத்திக் கொண்டிருக்கப் போவதில்லை. காரியத்தில் கண்ணாயிருந்தால் போதும். எப்படி எப்படி மாறுவாயோ, எந்தெந்த விதமாக நடந்து கொள்வாயோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் கொல்லவும் மாட்டேன்” என்று சுபாவமான நிலைக்கு வந்து பேசினார்.'

அழகிய நம்பிக்கு அவருடைய பேச்சு சிறிது தெம்பு கொடுத்தது. தன்னையும்-தன் மனப் போக்கையும்தன்னுடைய வார்த்தைகளால் தானே அவருக்கு விளக்கிப் புரிய வைக்க முடிந்தது. அவன் துணிவை அதிகப்ப்டுத்தி யிருந்தது. தம்பிக்கையை உயர்த்தியிருந்தது. .

இப்போது நீ இங்கே என்ன செய்து கொண்டிருக் கிறாய்? பூர்ணா எத்தனை மணிக்கு வெளியேறினாள்?"அறையை ல்ட்டு வெளியே போகப் புறப்பட்டவர் தயங்கி நின்று கொண்டே மேலும் கேட்டார்.

x "அவள் மூன்று மனக்கே போய்விட்டாள். நான் வரவு' செலவு கணக்குகளைச் சரிபார்க்கிறேன். என்னென்ன காரியங்களை அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நான் தண்காணிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லியிருந்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/125&oldid=597262" இலிருந்து மீள்விக்கப்பட்டது