பக்கம்:பிறந்த மண்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ขศ. பார்த்தசாரதி . jzs

வேனோ?-என்ற பயம் இவருக்கு இருக்கிறது. இன்று. மாலை பூர்ணாவைச் சந்திக்க அவள் வீட்டுக்கு நான் தேடிப் போகப் போகிறேன் என்பதை வேறு இவர்

தெரிந்து கொண்டுவிட்டால் ஒரே அடியாக என் மேல்

சந்தேகப்பட்டு என்னைப்பற்றி நம்பிக்கையிழந்து போய்

விடுவார். நல்லவேளை, என் வாயில் அந்தச் சொற்கள்

வந்துவிடாமல் தப்பித்துக்கொண்டேன்-என்று நினைத்து

மனஅமைதி அடைந்தான் அழகியநம்பி.

நாலேமுக்கால் மணி சுமாருக்கு அலுவலக அறையைப் பூட்டிக்கொண்டு பின் கட்டிலிருந்த தன் அறைக்குச் சென் நான் அவன். சமையற்காரச் ச்ோமு தயாராகச் சிற்றுண்டிகாபி-எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தான். முகம் கை,கால் கழுவிக்கொண்டு சமையலறைக்குள் சென்றான்.

கால்மணி நேரம் கழித்து அழகியநம்பி தன் அறைக்குத் திரும்பியபோது அறை வாசலில் தன்னை எதிர்பார்த்துக் கொண்டு அதே கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். .புன்முறுவலோடு கைகூப்பி அவனை வணங்கினார் - א அந்த இளைஞர். “வாருங்கள்! இப்படி உள்ள்ே வந்து உட்காருங்கள்”-என்று அவரை வரவேற்று அவருக்குப் பதில் வணக்கம் செலுத்தினான் அழகியநம்பி. பிரம நாயகம் தன்னைக் கூட்டிக்கொண்டு போய் அறிமுகப் படுத்தியபோதும், வேறு இரண்டொரு சந்தர்ப்பங்களிலும் அந்த இளைஞரைக் கிடைக்குள் சந்தித்திருந்தான் அவன்.

அந்த இளைஞருக்கு நல்ல சிவப்பு.நிறம். அழகிய முகம். அகன்ற நெற்றியின் தொடக்கத்தில் புருவங்கள் கூடும் இடத்தில் சிறிய வட்டவடிவமான சத்தனப் பொட்டு, 'இலங்கியது. கள்ளங்கபடமில்லாத சிரிப்பு; களையுள்ள தோற்றம்-இரண்டும் அந்த இளைஞரைப் பார்த்தவுடன் அழகியநம்பியின் உள்ளத்தில் ஒருவதைக் கவர்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/127&oldid=597265" இலிருந்து மீள்விக்கப்பட்டது