உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிறந்த மண்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பிறந்த மண்

உண்டாக்கின. அந்த இளைஞர் யாழ்ப்பாணத் தமிழர் என்றும், அந்தக் கடையில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இளைஞர்களில் அவரும் ஒருவர் என்றும் பொது வாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான் அவன். இரண்டொரு முறை அவனைச் சந்தித்தபோது அவர் புன்முறுவலும் வணக்கமும்,செலுத்தியிருக்கிறார்.அப்பொழு. தெல்லாம்கூட அந்த இளைஞரைப்பற்றி விரிவாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டானதில்லை.

அந்த இளைஞர் தன்னைத் தேடிவந்து தன் அறைக்குள் உட்கார்ந்தவுடன் இத்தனை நினைவுகளும் அழகிய நம்பியின் மனத்தில் உண்டாயின.

'தயவு செய்து உங்கள் பெயரை எனக்குச் சொல்லி, விடுங்கள்! அன்றைக்கு உங்களை அறிமுகம் செய்யும்பேர்து

கேட்டது. மறந்துவிட்டது."-அழகியநம்பி சிரித்த முகத் தோடு அந்த இளைஞரை விசாரித்தான்

என் பெயர் சபாரத்தினம்-என்றார். அந்த "இளைஞர். யாழ்ப்பாணத் தாருக்கே உரிய தமிழின் இனிமை, "தமிழின் குழைவு-தமிழின் தூய்மை-எல்லாம் அந்த


இளைஞரின் பேச்சில் அமைந்திருந்தன, "எனக்குத் தமிழ் .

நாட்டு நண்பர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் உங்க,

ளோடு நெருங்கிப் பழக ஆசைப்படுகிறேன். முதன் முதலாக

நேற்று. உங்களைப் பார்த்த காலந்தொடக்கம், என்

சபாரத்தினம் சிறு குழந்தைபோல் தன் மனத்தில்.

தோன்றியதை ஒளிவு மறைவின்றி. வெளியிட்டார். சொற். களைச் சிதைக்காமல், விழுங்காமல் நிறுத்தி.நிறுத்தி இனிய குர்லில் அந்த இளைஞர் பேசிய விதம் அழகியநம்பியின் உள்ளத்தைத் தொட்டது. அவருடைய பேச்சில் இடை விடையே ஈழத்துத் தமிழ்நடையின் மரபுத் தொடர்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/128&oldid=597268" இலிருந்து மீள்விக்கப்பட்டது