பக்கம்:பிறந்த மண்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ர். பார்த்தசாரதி 129 'சபாரத்தினம்! கொஞ்சம் இப்படி வாருங்கள். டிங்க்ளிடம் ஒன்று விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்." -விடைபெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்று விட்ட அவரை மீண்டும் கூப்பிட்டான் அழகியநம்பி. - "ஒ என்ன வேண்டும்: கேளுங்கள், நன்றாகச் சொல் கிறேன்”-சபாரத்தினம் திரும்பி வந்தார். அந்த ஒ'என்னும் வியப்பிடைச் சொல்ல்ை அவர் சொல்லும்போது குயில் அகவுவது போன்ற ஒரு நளினம்-ஒரு மென்மை அதில் கலந்: இருந்தது. அழகியநம்பி அந்தத் தெருவின் பெயரை அவரிடம் சொல்லி அதற்குப் போய்ச் சேரவேண்டிய் வழி விவரங்களைச் சொல்லுமாறு கேட்டான் - 15. சபாரத்தினம் தெரிவித்த இரகசியம் அழகியநம்பி கூறிய தெருவின் பெயரைக் கேட்டதும் சிரிப்பும் மலர்ச்சியும் கொஞ்சும் சபாரத்தினம் முகத்தில் அவை இரண்டுமே மறைந்தன. அழகியநம்பியின் முகத்தை இரண்டொரு விநாடிகள் இமைக்காமல் பார்த்தார்.அவர், "அந்தத் தெருவில் நீங்கள் யாரைப் புார்க்கவேண்டும்: அழகியநம்பிக்கு வழி கூறாமல் இப்படி ஒர் எதிர்க் கேள்வி யைச் சபாரத்தினம் கேட்டார். அழகியநம்பி இந்தக் கேள் வியை எதிர்பார்க்கவில்லை. அவன் திகைத்தான். பூர்ணா வைப் பார்ப்பதற்காகப் போகிறேன் -என்று சொல்வதற்கு அவன் மனம்,ஒப்பவில்லை. எப்படிச் சொல்வது? என்ன, சொல்வது?-என்று தயங்கினான் அவன். அந்த உண்மை யைச் சொல்லிவிடத் துணிந்திருந்தால் அவன் அப்போதே சோமுவைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போயிருப்பானே? \ . "உங்களுக்குச் சொல்ல விருப்பமில்லையென்றால் வேண்டாம். தெரிந்துகொண்டு ஆகவேண்டுமென்று நான் கேட்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/131&oldid=597297" இலிருந்து மீள்விக்கப்பட்டது