பக்கம்:பிறந்த மண்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? பிறந்த மண் "ஏன் கூடாது என்கிறீர்கள்? ஒரு கர்ரணமும் சொல். லாமல் இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?” . "காரண்ங்கள் ஒள்றல்ல, இரண்டல்ல. பல அவற்றை யெல்லாம் இப்படிப் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டே கலபமாகப் பேசித் தீர்த்துவிட முடியாது. ஒய்வாக ஓர் இடத்தில் உட்கார்த்து உங்களிடம் தனிமையில் விவரித்துக் கூறவேண்டும்.” - * * அப்படியே செய்யலாம் சபாரத்தினம்! உங்கள் வார்த் தைகளை நான் நம்புகிறேன். இன்றைக்குப் பூர்ணாவின், வீட்டிற்கு நான் போகவில்லை. வேறு எங்காவது போய்த், தனிமையில் பேசிக்கொண்டிருக்கலாம்,' சரி புறப்படுங்கள். கடற்கரைக்குப் போகும் பஸ் . இதோ வந்து கொண்டிருக்கிறது.” - - இல்லை. கடற்கர்ை வேண்டாம். நேற்றே அங்குபோய் கற்றிப் பார்த்து வந்துவிட்டேன். வேறோரு புதிய இடத்திற். குப் போகலாமே?" என்றான் அழகியநம்பி. கடற்கரைக் குப் போனால் ஒரு வேளை லில்லியையும்,மேரியையும் அங்கே 'சந்திக்க நேர்ந்தாலும் நேரலாம். அவர்களைச் சந்தித்து. விட்டால் சபாரத்தினத்துடன் பேசுவதற்குத் தனிமையே வாய்க்காதோ, என்ற தயக்கம் அவன் மனத்தில் இருந்தது. நீங்கள் கழனியாவினுள்ள பெளத்த ஆலயத்திற்குப் போயிருக்கிறீர்களோ?” 3. . 'இல்லை! இனிமேல்தான் போகவேண்டும்! அது இங்கி ருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? இன்றைக்கு வேண்டுமானால், நாம் அங்கே போகலாமே!”

  • ... s "தொலைவைப் பற்றி என்ன கவலை? நடந்தா போகப் ப்ோகிறோம்? பஸ்ஸில் ஏறினால் கால்மணித் தியாலத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவான்!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/134&oldid=824784" இலிருந்து மீள்விக்கப்பட்டது