பக்கம்:பிறந்த மண்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ತಿರುಕಿಹ uk

இதோ வந்துவிட்டேன்.நீபோ!' - என்று பதில் சொல் லிக்கொண்டே அவளைப் பின்பற்றி மாடிப்படியில் இறங் கினான் அழகியநம்பி. - * * * * * *

"என்னடா அழகு! இந்தப் பாழாய்ப்போன வெள்ள்ம் வந்து கெடுத்துவிட்டதே? இன்றைக்குப் பத்து மணிக்குத் தானே பிரமநாயகம் உன்னைத் தூத்துக்குடிக்குப் புறப் பட்டுவரச்சொல்லியிருந்தார்?. இலையில் இட்டிலியைப் பரிமாறிக் கொண்டே கேட்டாள் அவனுடைய தாயார்.

"ஆமாம்! இன்றைக்கேதான். நான் என்னம்மா செய் கிறது? இப்ப்டி மழை கொட்டி ஊரெல்லாம் சமுத்திரத்தில் மிதக்கும் தீவாந்திரமாகப் போகிறதென்று எனக்கு முன்னா லேயே தெரியுமா?" - -

"பிரமநாயகம் நீ ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்?" -

"ஒருவர் நினைத்துக் கொள்வதையும் நினைத்துக் கொள்ளாததையும் பற்றி நாம் கவலைப்பட்டு முடியுமா அம்மா? எதற்கும் வெள்ளம் வடிந்து வெளியூருக்குப் போக லாம் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் தூத்துக்குடிக்குப் போய்விட்டு வரலாம் என்றுதான் எண்ணியிருக்கிறேன்.”

‘'எதுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வருவதுதான் நல்லது, இந்தப் பக்கத்து வெள்ள நிலவரம் தூத்துக்குடி வரை ஸ்ட்டாமலா இருக்கும்? ஒருவேளை பிரமநாயகத் துக்கும்.தெரிந்திருக்கலாம். நீ வராததற்கு வெள்ளம்தான் கரணம் என்று எண்ணிக்கொண்டு உனக்காக இன்னும் சில புதான் தாமதித்தாலும் தாமதிப்பாரோ என்னவோ?” -

"எதைப்பற்றி நினைத்தாலும் நாம் நினைக்கும்போது 醬蠶 நினைப்போம் அம்ம்ா!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் அழகியநம்பி, அந்தச் சிரிப்பில் நம்பிக்கையின் வறட்சிதான் இருந்தது. . முேன்கோபியானாலும் பிரமநாயகத்துக்கு சவு இரக்கம் உண்டு, எனக்கென்னவோ இன்றைக்கு நீ போதாவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/14&oldid=596632" இலிருந்து மீள்விக்கப்பட்டது