பக்கம்:பிறந்த மண்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - பிறந்த மண் யில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அடிக்கடி குமட்டிக் குமட்டி வாந்தியெடுத்தார். என்னென்னவோ நம்ப முடி யாததை எல்லர்ம் சொன்னார்கள், வாந்தியெடுத்ததில் சுருள் சுருளாக மயிர் வந்து விழுந்ததாம். கறுப்புநிறத்தில் உருண்டை, உருண்டிையாக ஏதோ அகப்பட்டதாம். அவனை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்த வர்கள் இன்னும் என்னவெல்லாமோ கதைகதையாக்ச் சொன்னார்கள். கடைசியில் பையன் பிழைக்கவில்லை. பிழைக்கவந்த இடத்தில் இப்படி அலங்கோலமான முறை யில் கெட்ட பேருடன் இறந்து போனான். பிரமநாயகம் ஊருக்குப் போய்ப் பையனின் பெற்றோரிடம் நடந்த வற்றை அப்படியே சொல்லாமல், ஏதோ கடுமையான சுரத்தினால் பையன் இறந்து போய்விட்ட மாதிரி மாற்றிச் சொல்லி அவர்களைத் தேற்றிக் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுத் திரும்பினார் . 'இன்னும் ஒர் இளைஞர்,நன்றாகப்படித்தவர்.திருச்சிப் வக்கமிருந்து வந்திருந்தார். அவர் முதலில் பூர்ணாவிட்ம் அளவுமீறிப் பழகிவிடாமல் வேலையுண்டு, தாம் உண்டு' என்று கட்டுப்பாடாக இருந்தார். அந்தக் கட்டுப்பாட்டை யும், பிடிவாதத்தையும் இரண்டே இரண்டு வாரங்களுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. அவரும் அவள் வலையில் விழுந்தார். ஈருடலும் ஒருயிரும்போல அவளை விட்டுப் பிரியாமல் அவளோடு திரிந்தார். கடைசியில் ஒரு நாள் பிரமநாயகத்திடம் சண்டை போட்டுச் சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு யாரிடமும் சொல்லா மல் ஊருக்குக் கப்பலேறிவிட்டார், .. “உங்கள் பக்கத்திலிருந்து வரும் இளைஞர்கள்தாம். இப்படி நிலைக்காமல் ப்ோய்ச் சேர்ந்தார்கள். துணிச்சலும், தன்னம்பிக்கையும், எதற்கும் அஞ்சாத இயல்பும் உடைய யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவரைக் கொண்டுவந்து பிரம். நாயகம் அந்த வேலையில் நியமித்தாரே; அவராவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/140&oldid=597312" இலிருந்து மீள்விக்கப்பட்டது