நா. பார்த்தசாரதி 139 நிலைத்தர்ரா இல்லையே! மூன்றே மாதங்களில் ஆயிரக் 'கணக்கில் கையாடல் செய்துவிட்டதாக அவர்மேல்பொய்க்க கணக்குக் காட்டிப் பூர்ணாவே அவரைத் துரத்த வழி செய்துவிட்டாள்.அந்த மனிதர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை எப்படியும் வெளியேற்றிவிட வேண்டுமென்பதற் காகக் கணக்கில் மோசடி செய்து கையாடல் பழியை அவர் மீது சுமத்தி வெளியேற்றினாள் பூர்ணா. இப்ப்டி இன்னும் இரண்டொருவர் வந்து நிலைக்காமல் போயிருக்கிறார்கள். அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே? ஒவ்வொருவர் கதையும் ஒவ்வொரு விதமாக முடிந்திருக்கிறது. முடித்து வைத்தசாகலம் முற்றிலும் பூர்ணாவுக்குச் சொந்தமானது. அவள் கதையை முடித்து அவளை வெளியே அனுப்பிவைக் கத்தான் யாருக்கும் துணிவில்லை. இந்த நிலையில்ஏழாவது ஆளாக உங்களைத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு வந்திருக்கிறார் பிரமநாயகம். எனக்கென்ன்வோ, நீங்கள் வந்த அன்றே-உங்களைப் பார்த்ததிலிருந்துஉங்கள் மேல் நீக்கமுடியாத ஒர் அனுதாபமும் அன்பும் ஏற்பட்டு. விட்டன. இல்லையானால், வலுவில் உங்களைத் தேடிவந்து உங்கள் நட்டைக் கோரியிருக்க மாட்டேன்”-சபாரத்தினம் பயங்கரமும் எச்சரிக்கையும் கலந்த அந்த உண்மைகளைச் சொல்லி முடித்தார். ... " அழகிய நம்பி பெருமூச்சுவிட்டான். நன்றாய்க் கதை, சொல்லத் தெரிந்த யாரிடமோ மர்மமான நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு கதையைக் கேட்டு முடித்தது போலிருந்தது அவனுக்கு. சபாரத் தினம்! உங்களுக்கு மட்டும் அம்மாதிரி உணர்ச்சி ஏற்படவில்லை. எனக்கும் ஏற்பட்டது. உங்களை முதலில் சந்தித்தவுடன் யாரோ ஒரு புதிய மனிதர்ைத் தற்செயலாகச் சந்திக்கிறோம் என்று நான் நினைக்கவே இல்லை. வெகுநாள் பழகிய ஓர் உண்மை நண்பரைச் சந்திப்பது போன்றே இருந்தது”-என்று சொல்லி நிறுத் தின்ான் அழகியந்ம்பி. . .
பக்கம்:பிறந்த மண்.pdf/141
Appearance