பக்கம்:பிறந்த மண்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பிறந்த மண் "இருக்கலாம் எப்போதோ-ஒரு பிறவியில் நீங்களும் நானும் சகோதரர்களாக இருந்திருக்கிறோம் போலிருக் கிறது.” உருக்கமான குரலில் சபாரத்தினம் இப்படிக் கூறிய போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த அழகியநம்பிக்குப் புல்லரித்தது. பவித்திர மயமானதொரு புதிய சிலிர்ப்பு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவன் உடலில் பரவியது, ஆகா! சகோதரன்'-என்ற அந்தச் சொல்லின் ஒலிக்குத்தான் எவ்வளவு பெரிய சக்தி என்று வியந்தான் அவன். அந்த வியப்பில், அந்தப் புனிதமான வார்த்தை யைக் கேட்ட பூரிப்பில்-தெய்விகச் சிலிர்ப்பில் அழகியநம்பி ஆழ்ந்து மூழ்கியிருந்தபோது பின்னாலிருந்து ஒரு ೧uir . குரல் அவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டது. திடீரென்று. யாரோ அதலபாதாளத்திற்குள் அவளைப் பிடித்து இழுப் பதுபோல் அவன் செவிப்புலனைத் தீண்டிப் பற்றியிழுத்தது அந்தக் குரல். அழகியநம்பியின் உடல் நடுங்கிக் குலுங்கியது: பலிக்களத்து ஆடுபோல் மிரண்டு தயங்கும் கண்களால் திரும்பிப் பார்த்தான், - -

  • 。 பூர்ணா இன்னும் யாரோ ஒரு பெண்ணோடு அவனும்

சபாரத்தினமும் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வந்து கொண்டி இந்த இடத்துக்கும் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கும் ஐந்தாறு கெஜதாரம் இருக்கும், சபாரத்தினத் தையும் தையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அப்படிய்ே எழுந்திருந்து ஒடிவிடலாமா?-என்று நினைத்தான் அவன். இப்போது என்ன செய்வது? என்று கேட்கும் பாவனையில் பயக்குறிப்புடன் கூடிய பார்வையால் சபாரத்தினத்தின் முகத்தைப் பார்த்தான் அவன். “ப்யப்படாதீர்கள்.நான் இருக்கிறேன்-என்று மெது' வாகச் சொல்லிக் கையமர்த் திக்காட்டினார், சபாரத்தினம். அதற்குள் அவள் பக்கத்தில் வந்துவிட்டாள். திடமாக இருக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/142&oldid=597314" இலிருந்து மீள்விக்கப்பட்டது