பக்கம்:பிறந்த மண்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 141 அவள் பக்கத்தில் வந்ததும் புல் தரையில் எழுந்து நின்றான். சபார்த்தினம் எழுந்திருக்கவில்லை. வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தீர்களே! ஏன் வரவில்லை?-அiள் குரல் அதட்டுவது போல்தான் இருந்தது. என்ன பதில் சொல்வதென்று விழித்தான் அவன். சிவப்புச்சாயம் பூசிய அவள் உதடுகளை அப்போது பார்த்தவுடன் கண்களில் மனிதர்களை அடித்து இரத்தத்தைக் குடிக்கும் கோரமான பெண் அரக்கி ஒருத்தி இதழ்களில் பச்சை இரத்தம் உலராமல் தன்முன் நிற்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. 16. பாவம் பன்னீர்ச்செல்வம்... வட்டிக்கடைப் பன்னீர்ச் செல்வத்திற்குக் குறிஞ்சியூரில் இன்னொரு பெயர், அவரிடம் கடன் வாங்கி அனுபவப்பட்ட வர்களால் சூட்டப்பட்டிருந்தது. நட்சத்திரேயன்' என்ற திருப்பெயர்தான் அது. அசல் வசூலாவதற்குள் அரட்டியும் மிரட்டியும் அவர், வசூல் செய்யும் வட்டிப் பணத்தின் கொகை சில சமயங்களில் அசலைக் காட்டிலும்கூட அதிக மாகிவிடும். அசல் தொகையை மொத்தமாகக் கொடுத்து. அடைப்பதற்கு முன் கடன் வாங்கியவர் தனித்தனியாக எவ்வளவு கொடுத்தாலும் அவ்ையெல்லாவற்றையும். வட்டிக் கணக்கில்தான் வரவு வ்ைப்பார் மனிதர். மொத்த மாக அசலைக் கொடுத்து அடைக்க முடியாத எவனாவது ஓர். அப்பாவி அசல் அடைப்பட்டுக் கொண்டுவருகிறது -என்ற நம்பிக்கையோடு வட்டியோடு சிறிது சிறிதாகதவணையில் கொடுத்துக்கொண்டு வருவான். இந்தக் கல் நெஞ்சுக்கார மனிதரோ, அசல் கணக்கில் ஒன்றும் வரவு வைக்காமல் வட்டிப்பணம், தவணையாக வந்த பணம் 'எல்லாவற்றையும் சேர்த்து வட்டிக் கணக்கிலேயே வரவு வைத்து வர்யில் போட்டுக் கொள்வார். வருடமுடிவில், "அசல் இன்னும் அப்படியே இருக்கிறது?எப்போது அடைக் கப்போகிறாய்?'- என்று அவர் அதட்டிக் கேட்கும்போது அவரிடம் கடன் வாங்கிய ஏழைக்கு வயிறு பற்றி எரியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/143&oldid=824800" இலிருந்து மீள்விக்கப்பட்டது