பக்கம்:பிறந்த மண்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 பிறந்த மண்

இல்லை; நிம்மதி இல்லை. நம்பிக்கையுமில்லை. &Flljrr . ரத்தினம் உடனிருந்தது நல்லதாகப் போயிற்று. இல்லையா

யானால், அன்று மாலை கழனியாவிலிருந்து எப்படியும்

வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டே

போயிருப்பாள் பூர்ணா. அழகியநம்பியும் அவள் அழைப்பை

மறுத்து மீற முடியாமல் போய் மாட்டிக்கொண்டிருப்பான்.

சபாரத்தினம் உடனிருந்ததால் சரியான சமயத்தில் பூர்ணா

என்னும் தூண்டிவின் கூர்மையான கொக்கியில் சிக்காமல்

காப்பாற்றப்பட்டான் அவன்.

'ஆரீரை மணிவரை உங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லை. அதற்கப்புற்ம் எங்கே வர்ப்போ ஒறீர்கள்?’ என்று நம்பிக்கையிழந்து இந்தச் சிநேகிதியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டேன். இங்கே நீங்கள் அகப்பட்டு விட்டீர்கள். புறப்படுங்கள் போகலாம்” -என்று அவள் மயக்கும் விழிகளைச் சுழற்றிச் சிரித்துக் கொண்டே கூறியபோது, அழகியநம்பி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சபாரத்தினத்தின் முகத்தைப் பார்த்தான் -

'இல்லை. இன்று இவரை நீங்கள் கூப்பிடாதீர்கள். எங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன் நான். இன்னொரு நாள் உங்கள் வீட்டுக்கு வருவார்”.சபாரத்தினம் இழே உட்கார்ந்து கொண்டிருந்தவர் எழுந்திருந்து பூர்ணா விடம் பேசினார்

"ஓ! உங்கள் வேலைதானா இதெல்லாம்?-பூர்ணா சபர்ரத்தினத்தை நோக்கி வெடுக்கென்று இப்படிக் கேட் டாள். அந்தக் கேள்வியில் சிலேடையாக இரண்டு பொருள்கள் தொனித்ததைச் சபாரத்தினம் துணுக்கமாகக் தவனித்துக் கொண்டார். அழகியநம்பி அதைக் கவனித் திருக்க நியாயமில்லை. கவனித்திருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்காது. “சரி நீங்கள் என் வீட்டிற்கு வர விரும்பவில்லை போலிருக்கிறது" அழகிய நம்பியிடம் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/152&oldid=597534" இலிருந்து மீள்விக்கப்பட்டது